ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்: ட்ரம்ப் மீண்டும்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும் என்று அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்தியா என்னிடம் ஏற்கனவே கூறியது உங்களுக்கும் தெரியும். இது ஒரு செயல்முறை. திடீரென நிறுத்த முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும். 40 வீதமளவிற்கு
அளவுக்கு நிறுத்திவிடுவார்கள். இந்தியாவின் செயல்பாடு மிகச் சிறப்பானது. பிரதமர் மோடியுடன் நேற்று நான் பேசினேன். உண்மையில் அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 16-ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப் “ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும் இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.

ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் ட்ரம்ப்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.

நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால் என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்பின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக மறுத்தது. இது தொடர்பாக அதே 16ம் தேதி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில் “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

நிலையான எண்ணெய் விலை பாதுகாப்பான விநியோகம் ஆகியவையே இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும் சந்தை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இதில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி இருக்கிறது. இது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை