சூறாவளியால் நினைத்துப்பார்க்க முடியாத வெள்ளம் , மின்சாரம் துண்டிப்பு- யார் உயிருடன் இருக்கின்றார் என தெரியாத நிலை – ஜமைக்காவில் மெலிசா கோரத்தாண்டவம்

ஜமைக்காவில் இன்று காலை பலர் மின்சாரம் இல்லாத நிலையிலேயே கண் விழித்ததால் ஜமைக்காவை அதிகாலையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் அந்தவழமையான இசை ஒலிக்கவில்லை.
ஜமைக்காவின் மூன்றில் இரண்டு பகுதி மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.ஜமைக்காவின் மேற்கு பகுதி பெருமளவிற்கு நீருக்குள் மூழ்கியுள்ளது.நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் வீசிய மெலிசா சூறாவளியின் தாண்டவத்தினால் வீடுகள் அழிந்து போயுள்ளன.


நேற்றிரவு முழுவதும் காற்றும் மழையும் ஜமைக்காவை இடைவிடாது தாக்கியதால் ஜமைக்கா ஊழிக்காலம் குறித்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தும் விதத்தில் காணப்படுகின்றது என உள்ளுர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தொடர்பாடல்கள் முடங்கியுள்ளனஇஇதன் காரணமாக உண்மையான அழிவின் அளவு தெரியவில்லை.ஜமைக்காவை பேரழிவு பகுதி என பிரகடனம் செய்துள்ள அந்த நாட்டின் பிரதமர் அன்றூ ஹொல்னெஸ் மிகப்பெரும் அழிவுகள் குறித்தும் மருத்துவமனைகள் வீடுகள் வர்த்தகநிலையங்களிற்கு பெரும் சேதம் குறித்தும் எச்சரித்துள்ளார்.
இதுவரை எவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகாவிட்டால் அனைவரும் உயிருடன் உள்ளனரா என்பதை கண்டறிவதே எனது முதல் பணி என மொன்டெகோ பேயின் மேயர் பிபிசிக்கு தெரிவித்தார்.
ஐமைக்காவின் நவீன வரலாற்றில் அந்த நாடு எதிர்கொண்ட மிகமோசமான சூறாவளியான மெலிசா நாடு முழுவதிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
மேலிசா அதன் உச்சத்தில் காணப்பட்டவேளை மணிக்கு 298 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது இது அமெரிக்காவின் கட்ரீனாவை விட அதிகம் – 2005 இல் கத்திரீனா காரணமாக அமெரிக்காவின் நியுஓர்லியன்சில் 1300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.


ஜமைக்கா தற்போது ஊழிக்கால திரைப்படம் போல காட்சியளிக்கின்றது என மேற்கு ஜமைக்காவை சேர்ந்த நாடாளுமன்றஉறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இரவு மிகவும் அழுத்தம் மிக்கதாகவும் தீவிரமானதாகவும் காணப்பட்டது கடும் காற்றும் மழையும் காணப்பட்டது என அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்பாடல்கள் சிதைந்துள்ளனஇவழமையாக நீங்கள் பேசும் எவருடனும் பேச முடியாத நிலை என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
வெள்ள நீர் இரண்டு மாடிக்கட்டிடத்தின் கூரைவரை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
எனது வீட்டின் கூரையின் ஊடாக வெள்ளநீர் வருகின்றது நான் மிகவும் இக்கட்டான நிலையிலிருக்கின்றேன் என பெண்ணொருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதி செய்யப்படாத போதிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்இஎன அஞ்சுவதாக சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள ஜமைக்கா பிரதமர் பரந்துபட்ட அழிவு ஏற்பட்டுள்ளது மருத்துவமனைகள் பாடசாலைகள் எவையும் தப்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் அரசாங்க அமைச்சர் டெஸ்மண்ட் மெக்கன்சி செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூறுகையில் செயிண்ட் எலிசபெத்தின் தென்மேற்கு திருச்சபை “நீரில் மூழ்கியுள்ளது” என்றும் பிளாக் ரிவர் சமூகத்தில் குறைந்தது மூன்று குடும்பங்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டதாகவும் கூறினார்.

ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக மீட்புக் குழுக்கள் அவர்களை அடைய சிரமப்படுகின்றனர்” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

செயிண்ட் எலிசபெத்தின் கார்லைல் கிராமத்தில் உள்ள தனது நான்கு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வெர்னா ஜெனஸ் புயலில் இருந்து தஞ்சமடைந்திருந்தார் அப்போது சூறாவளி அவரது வீட்டின் துத்தநாக கூரையை கிழித்தெறிந்தது.

சூறாவளி அந்தப் பகுதியைக் கரையைக் கடந்தபோதுஇ ​​73 வயதான காய்கறி விவசாயி தனது மகன்கள் மற்றும் குழந்தை பேரக்குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.

மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் வெர்னாவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த அவரது சகோதரி ஜூன் பவல் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசியிடம் பேசினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு