165 வருடகால வரலாறு மாறுகின்றது – இலங்கை புகையிரத சேவையில் முக்கிய பதவிகளிற்கு பெண்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை புகையிரதசேவையின் 165 கால வரலாற்றில் முதல்தடவையாக புகையிரத திணைக்களத்தின் பல முக்கிய பதவிகளிற்கு பெண்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

இதுவரை பல முக்கிய பதவிகளிற்கு ஆண்களே நியமிக்கப்பட்டிருந்தனர்.2012 முதல் 2015 வரை புகையிரத சேவையில் மேற்பார்வையாளர் பதவிக்கு பெண்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் முதல்தடவையாக புகையிரத திணைக்களத்தின் பல முக்கிய பதவிகளிற்கு பெண்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

பாரம்பரியமாக ஆண்களிற்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளில் பெண்களிற்கு வேலைவாய்ப்பை வழங்குவது என்ற அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு ஏற்பவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் புகையிரத சேவையில் பெண்களிற்கு பல வேலைகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்