தமிழகத்தில் டிட்வா புயல்டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 1.40 லட்சம் ஏக்கர் சம்பாபயிர்கள் நீரில் மூழ்கின

நாகப்பட்டினம்: ‘டிட்​வா’ புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு முதல் இடை​வி​டாது கனமழை பெய்து வரு​கிறது. இதனால் சுமார் 1.40 லட்​சம் ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த சம்​பாஇ தாளடி பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ளன. தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் 31.20 செ.மீ. மழை பதி​வானது.

தென்​மேற்கு வங்​கக் கடல் மற்​றும் அதையொட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் உரு​வான ‘டிட்​வா’ புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர் திரு​வாரூர் நாகை மயி​லாடு​துறைஇ காரைக்​கால் மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு தொடங்கி இடை​வி​டாது கனமழை பெய்து வரு​கிறது. மேலும் ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டிருந்த நாகை காரைக்​கால் மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் நேற்று அதி​க​னமழை பெய்​தது. இதனால் பல்​வேறு இடங்​களில் குடி​யிருப்​பு​களில் மழைநீர் சூழ்ந்​துள்​ளது. பொது​மக்​கள் வீடு​களில் முடங்​கினர்.

நாகை மாவட்​டத்​தில் சுமார் 60 ஆயிரம் ஏக்​கரிலும் திரு​வாரூர் மாவட்​டத்​தில் 50 ஆயிரம் ஏக்​கரிலும்இ மயி​லாடு​துறை​யில் 30 ஆயிரம் ஏக்​கரிலும் தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் 2 ஆயிரம் ஏக்​கரிலும் சாகுபடி செய்​யப்​பட்​டுள்ள சம்​பா தாளடிப் பயிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது.

புயல் சின்​னம் காரண​மாக நாகை வேளாங்​கண்​ணி தரங்​கம்​பாடி பூம்​பு​கார் பழை​யாறு உள்​ளிட்ட பகு​திகளில் கடல் மிகுந்த சீற்​றத்​துடன் காணப்​பட்​டது. முன்​னெச்​சரிக்கை மற்​றும் மீட்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​வதற்​காக மாநில பேரிடர் மீட்​புப் படை​யினர் தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினர் சீர்​காழி தரங்​கம்​பா நாகை உள்​ளிட்ட பகு​தி​களில் முகாமிட்​டுள்​ளனர். மேலும் அந்​தந்த மாவட்ட கண்​காணிப்பு அலு​வலர்​கள் ஆட்​சி​யர்​கள் பாது​காப்​புப் பணி​களை மேற்கொண்டு வரு​கின்​றனர்.

5-ம் எண் புயல் கூண்டு: கனமழை காரண​மாக நாகை மயி​லாடு​துறை காரைக்​கால் தஞ்​சாவூர் மாவட்ட மீனவர்​கள் மறு உத்​தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்​கச் செல்ல வேண்​டாம் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதனால் மீன்​பிடித் துறை​முகங்​கள் கடற்​கரைகளில் விசைப்​படகு​கள் நாட்​டுப் படகு​ களை பாது​காப்​பாக மீனவர்​கள் நிறுத்தி வைத்​துள்​ளனர். மேலும் வடக்கு நோக்கி புயல் கடந்து செல்​லும் என்​ப​தைக் குறிக்​கும் வகை​யில் நாகை மற்​றும் காரைக்​கால் துறை​முகங்​களில் நேற்று 5-ம் எண் புயல் எச்​சரிக்கை கூண்டு ஏற்​றப்​பட்​டது.

நேற்று பிற்​பகல் நில​வரப்​படி தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை பகு​தி​யில் 31.20 செ.மீ. மழை அளவு பதி​வாகி​யுள்​ளது. இதே​போல தோப்​புத்​துறை​யில் 20 செ.மீ. திருப்​பூண்​டி​யில் 20 செ.மீ. வேளாங்​கண்​ணி வேதா​ரண்​யத்​தில் தலா 18 செ.மீ நாகை​யில் 17 செ.மீ. மழை பதி​வாகி இருந்​தது. சென்​னை எண்​ணூர் கடலூர் காட்​டுப்​பள்​ளி புதுச்​சேரி பாம்​பன்இ தூத்​துக்​குடி ஆகிய 7 துறை​முகங்​களில் 4-ம்​ எண்​ புயல்​ எச்​சரிக்​கை கூண்​டு ஏற்​றப்பட்​டுள்​ளது.

விவசாயிகள் கோரிக்கை: ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகைப் பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்