ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள்  மீதான அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு: அதன் தாக்கத்தை அரசாங்கம் இன்னும் மதிப்பிடவில்லை

புதன்கிழமை, 14 ஜனவரி 2026

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் 25% வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கம் இன்னும் மதிப்பீடு செய்யவில்லை என்று நேற்று தெரிவித்தது.

“அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய வரி விதிப்பு குறித்து நாங்கள் இன்னும் மதிப்பீடு செய்யவில்லை,” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான  நளிந்த
ஜயதிஸ்ஸ வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கம் பதவியேற்றது முதல் பல வெளிப்புற சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அவற்றை தன்னம்பிக்கையுடன் கையாண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இவ்வாறான அழுத்தங்களின் அதிர்வெண் மற்றும் தீவிரம் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டார்.

 ட்ரம்பின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகங்களுக்கும் 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் உறுதியானது.”

இலங்கைத் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். மாதத்திற்கு சுமார் 9,800 தொன் தேயிலையை ஈரான் இறக்குமதி செய்கிறது, இது இலங்கையின் முக்கிய விவசாய ஏற்றுமதி இடங்களின் முதல் 10 வரிசையில் ஈரானை வைக்கிறது. அதே நேரத்தில், இலங்கை ஏற்றுமதியின் ஒற்றை மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ளதுடன், ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டித் தருகிறது.

இரு சந்தைகளையும் சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் போட்டித்தன்மையை கடுமையாகப் பாதிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ஏதேனும் மோசமான விளைவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்றும்  ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.

READ MORE

அமெரிக்காவின் வர்த்தக எச்சரிக்கையினால் இலங்கையின் ஏற்றுமதி மீட்சிக்கு புதிய சிக்கல்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்