ஈரானில் பல வாரகால இராணுவநடவடிக்கையில் ஈடுபடுவதற்காக தயாராகும் அமெரிக்க படையினர் – ரொய்ட்டர்ஸ்

WASHINGTON -REUTERS

அமெரிக்கா ஈரானிடமிருந்து பதிலடியை முழுமையாக எதிர்பார்ப்பதாகவும், இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மாறி மாறி முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் வழிவகுக்கும் என்றும் அதே அதிகாரி கூறினார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தாக்குதலுக்கு உத்தரவிட்டால், ஈரானுக்கு எதிராக பல வாரங்கள் நீடிக்கக்கூடிய தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளுக்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள்ரொய்ட்டர்ஸிடம்  தெரிவித்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையே இதற்கு முன் காணப்பட்டதை விட மிகவும் பாரதூரமான மோதலாக மாறக்கூடும்.

மிகமுக்கிய தன்மை காரணமாக காரணமாக பெயர் குறிப்பிடாத நிலையில் பேசிய அதிகாரிகளின் இந்த வெளிப்பாடு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இராஜதந்திரத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக அமெரிக்க மற்றும் ஈரானிய இராஜதந்திரிகள் கடந்த வாரம் ஓமானில் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், ட்ரம்ப் அந்த பிராந்தியத்தில் இராணுவப் படைகளைக் குவித்தது புதிய இராணுவ நடவடிக்கை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது.

மத்திய கிழக்கிற்கு கூடுதல் விமானம் தாங்கி கப்பலை பென்டகன் அனுப்பி வைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். அத்துடன் ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள், போர் விமானங்கள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் மற்றும் தாக்குதல்களை நடத்தவும் தற்காத்துக் கொள்ளவும் கூடிய இதர ஆயுத பலங்களையும் அவர்கள் சேர்த்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை வட கரோலினாவில் உள்ள ஒரு தளத்தில் அமெரிக்க துருப்புக்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுடன் “ஒரு ஒப்பந்தம் செய்வது கடினமாக உள்ளது” என்று கூறினார்.

“சில நேரங்களில் நீங்கள் பயத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் உண்மையில் நிலைமையைக் கையாள உதவும் ஒரே விஷயம்,” என்று ட்ரம்ப் கூறினார்.

சாத்தியமான தொடர்ச்சியான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்கள் குறித்து கருத்து கேட்டபோது, ​​வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறுகையில்: “ஈரான் தொடர்பாக ட்ரம்ப் அனைத்து விருப்பங்களையும் (options) மேசையில் வைத்துள்ளார்,” என்றார்.

“அவர் எந்தவொரு பிரச்சினையிலும் பல்வேறு பார்வைகளைக் கேட்கிறார், ஆனால் நமது நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எது சிறந்தது என்பதன் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்கிறார்,” என்று கெல்லி கூறினார். இது குறித்து கருத்து தெரிவிக்க பென்டகன் மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியபோது அமெரிக்கா அந்த பிராந்தியத்திற்கு இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அனுப்பியது. இருப்பினும், ஜூன் மாதத்தின் “மிட்நைட் ஹேமர்” (Midnight Hammer) நடவடிக்கை என்பது அடிப்படையில் ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதலாகும், இதில் அமெரிக்காவிலிருந்து பறந்து சென்ற ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத்ாக்கின. இதற்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் மிகக் குறைந்த அளவிலான தாக்குதலை நடத்தியது.

அதிகரிக்கும் அபாயங்கள் இந்த முறை நடைபெற்று வரும் திட்டமிடல் மிகவும் சிக்கலானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கையில், அமெரிக்க இராணுவம் அணுசக்தி உள்கட்டமைப்பை மட்டுமல்லாமல், ஈரானிய அரசு மற்றும் பாதுகாப்பு நிலையங்களையும் தாக்கக்கூடும் என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார். அந்த அதிகாரி குறிப்பிட்ட விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.

ஈரான் போன்ற ஏவுகணைகளின் வலிமையான ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு எதிரான இத்தகைய நடவடிக்கையில், அமெரிக்கப் படைகளுக்கான அபாயங்கள் மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.

அமெரிக்கா ஈரானிடமிருந்து பதிலடியை முழுமையாக எதிர்பார்ப்பதாகவும், இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மாறி மாறி முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் வழிவகுக்கும் என்றும் அதே அதிகாரி கூறினார். பதிலடி அல்லது பிராந்திய மோதலின் அபாயங்கள் குறித்த கேள்விகளுக்கு வெள்ளை மாளிகையும் பென்டகனும் பதிலளிக்கவில்லை.

ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகளை அடக்குவது தொடர்பாக ஈரான் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை அவர் எச்சரிக்கையில், இராஜதந்திர தீர்வுக்கு மாற்றான வழி “மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்” என்றார்.

ஈரானிய எல்லைக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், எந்தவொரு அமெரிக்க இராணுவத் தளத்திற்கும் எதிராக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர இராணுவம் எச்சரித்துள்ளது. ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்கா தனது தளங்களை பராமரித்து வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை வாஷிங்டனில் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார், ஈரானுடன் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டால், “அதில் இஸ்ரேலுக்கு இன்றியமையாத கூறுகள் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

தடைகளை நீக்குவதற்குப் பதிலாக தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்த விவகாரத்தை ஏவுகணைகளுடன் இணைப்பதை நிராகரிப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?