அடுத்து வரவிருக்கும் இருபது-20 (T20I) மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்காகத் தேர்வு செய்யப்படும் இலங்கை அணியில் (Sri Lanka Squad) இடம் பெற வேண்டிய கட்டாயமான ஒரு வீரர்இளம் வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுளன் என இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித்மலிங்க சமூக ஊடகபதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
நீங்கள் திடீரென்று வானத்தில் இருந்து நேரடியாக ‘ஏ’ அணிக்கு (A team) வந்துவிட்டதாகவும், நீங்கள் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் (U19) அணியில் விளையாடவில்லை என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர்களுக்கு உங்களைத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், உங்களின் தேவை யாருக்கு உள்ளதோ, அவர்கள் நீங்கள் நீண்ட காலமாகவே இந்த விளையாட்டுக் கட்டமைப்பிற்குள் (System) இருக்கிறீர்கள் என்பதை நன்கறிவார்கள்.
நிச்சயமாக, அடுத்து வரவிருக்கும் இருபது-20 (T20I) மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்காகத் தேர்வு செய்யப்படும் இலங்கை அணியில் (Sri Lanka Squad) இடம் பெற வேண்டிய கட்டாயமான ஒரு வீரர் நீங்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளரின் (Fast bowler) திறமை உச்சத்தைத் தொடும் மிகச் சிறந்த வயது 19 முதல் 21 வரையாகும். எனவே, உங்களின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.