இலங்கையிலுள்ள மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரித்தானிய தகைமைகளை வழங்குவதற்காக ‘ESOL பிரீமியர் கேம்பஸ்’ மற்றும் ‘OCN லண்டன்’ ஆகியன கைகோர்ப்பு

உள்ளூர் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய (UK) அங்கீகாரம் பெற்ற தகைமைகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்குடன், ‘ESOL பிரீமியர் கேம்பஸ்’ (ESOL Premier Campus), பிரித்தானியாவின் சான்றிதழ் வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து ‘OCN லண்டன்’ (OCN London) தகைமைகளை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1970களில் இருந்து இயங்கி வரும் OCN லண்டன் என்பது, பிரித்தானியாவின் ‘Ofqual’ (அரசாங்க ஒழுங்குமுறை அமைப்பு) நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற பிரித்தானிய சான்றிதழ் வழங்கும் அமைப்பாகும். அகில உலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக வழங்கி வரும் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாக ESOL பிரீமியர் கேம்பஸ் திகழ்கிறது. இதன் மூலம், மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே ஆங்கிலம், வணிக மேலாண்மை (Business Management), கல்வி மற்றும் பயிற்சி (Education and Training), மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, Ofqual-ஒழுங்குமுறைக்கு உட்பட்ட தகைமைகளைப் பெற்று, தங்களது கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த மூலோபாயக் கூட்டாண்மையானது, பாரம்பரிய உயர்கல்வி வழிகளுக்குப் பதிலாக மலிவான மற்றும் நெகிழ்வுத்தன்மை (flexible) மிக்க மாற்று வழிகளை வழங்குவதுடன், இந்த OCN லண்டன் தகைமைப் பாதைகளை இலங்கையிலுள்ள கற்போருக்கு பரந்த அளவில் கிடைக்கச் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. கற்போர் தங்களின் கல்வி உயர்வு, தொழில்முறை மேம்பாடு மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் உலகளாவிய நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளையில், மட்டம் 3 (Level 3) முதல் மட்டம் 7 (Level 7) வரையிலான தகைமைகளை நோக்கி முன்னேற முடியும்.

இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கிய ESOL பிரீமியர் கேம்பஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஆண்ட்ரூ அபினாஷ் (Andrew Abinash) கூறுகையில், “ESOL பிரீமியர் கேம்பஸ் ஊடாக OCN லண்டன் தகைமைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இது கற்போர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவையின்றி சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரித்தானிய தகைமைகளைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. Ofqual-ஒழுங்குமுறைக்கு உட்பட்ட ஒரு பிரித்தானிய சான்றிதழ் வழங்கும் அமைப்பாக, OCN லண்டன் நிறுவனம் அதன் தரம், அணுகல்தன்மை மற்றும் கற்போரின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றது. எனவே, உலகத்தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புகளை உள்ளூரிலேயே வழங்குவதற்கான எங்களது பணியில் இந்தத் கூட்டாண்மை ஒரு முக்கிய மைல்கல்லாகும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தத் தகைமைகள் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொடர்ச்சியாகக் கற்க விரும்பும் வாழ்நாள் கற்போருக்கு (lifelong learners) உயர்கல்வி, தொழில் முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட மேம்பாடு ஆகியவற்றிற்கான நெகிழ்வுத்தன்மைமிக்க பாதைகளை வழங்குகின்றன. அதேநேரம் அவர்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப கற்றல் மற்றும் மதிப்பீடுகளைப் பெறுவதையும் இது உறுதி செய்கிறது. இந்த பிரத்தியேக கூட்டாண்மையின் மூலம், கற்போர் இப்போது பல்கலைக்கழகங்களின் ‘டாப்-அப்’ (top-up – பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வாய்ப்புகள்) மற்றும் சர்வதேச கல்வி விருப்பங்களை ஆதரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்விப் பாதைகளை அணுக முடியும். இது உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் சான்றிதழ்களை இலங்கையர்களுக்கு வழங்கி அவர்களை வலுவூட்டுகிறது” என்று தெரிவித்தார்.

இலங்கையில் OCN லண்டன் தகைமைகளைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு பின்வரும் தரப்பினருக்குப் மகத்தான பலன்களை வழங்குகிறது:

  • உலகளவில் புகழ்பெற்ற தகைமைகளைத் தேடும் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள்.

  • சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தரம் (A/L) முடித்து விட்டு, மாற்று உயர்கல்விப் பாதைகளைத் தேடும் மாணவர்கள்.

  • தொழில் முன்னேற்றத்தை விரும்பும் பணிபுரியும் உத்தியோகத்தர்கள்.

  • தொழில்முறை மேம்பாட்டுத் தகைமைகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் எதிர்காலக் கல்வியாளர்கள்.

  • தங்களது பிள்ளைகளுக்குத் தரமான சர்வதேச கல்வி வாய்ப்புகளைத் தேடும் பெற்றோர்கள்.

  • தங்களது மேலாண்மை நிபுணத்துவத்தை வலுப்படுத்த விரும்பும் தொழில்முனைவோர் (entrepreneurs) மற்றும் நிறுவன ஊழியர்கள்.

  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகத் தொடர் கல்வி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டிருப்பவர்கள்.

ESOL பிரீமியர் கேம்பஸ் மூலம் வழங்கப்படும் OCN லண்டன் பாடநெறித் தொகுப்பில் (portfolio) பின்வருவன அடங்கும்:

  • CEFR B1, B2, C1 மற்றும் C2 மட்டங்களிலான OCN லண்டன் ESOL சர்வதேச ஆங்கிலத் தகைமைகள்.

  • கல்வி மற்றும் பயிற்சியில் OCN லண்டன் மட்டம் 4 சான்றிதழ் (Level 4 Certificate in Education and Training).

  • வணிக நிர்வாகக் கொள்கைகளில் மட்டம் 3 சான்றிதழ் (Level 3 Certificate in Principles of Business Administration).

  • வணிக மேலாண்மையில் மட்டம் 4 டிப்ளோமா மற்றும் மட்டம் 5 டிப்ளோமா (Level 4 & Level 5 Diploma in Business Management).

  • டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் மட்டம் 4 சான்றிதழ் மற்றும் மட்டம் 4 டிப்ளோமா (Level 4 Certificate & Level 4 Diploma in Digital Marketing).

இந்தத் தகைமைகள் சர்வதேச கல்வி மற்றும் தொழில்முறைத் தரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளதுடன், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கான முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ESOL பிரீமியர் கேம்பஸ், மாணவர்கள் பிரித்தானியத் தரத்திற்கு இணையான தரமான கற்றல் மற்றும் மதிப்பீட்டைப் பெறுவதை உறுதி செய்கிறது. அதேவேளையில் மட்டம் 3 முதல் மட்டம் 7 வரையான தெளிவான தொடர் கல்விப் பாதைகளின் மூலமும் அவர்கள் பயனடைகிறார்கள். இதில் வெற்றிகரமாகத் தேறுபவர்கள் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் ‘டாப்-அப்’ (top-up) வாய்ப்புகளையும் பெற முடியும், இது அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை எதிர்காலத்தை மேலும் பலப்படுத்துகிறது.

கூடுதலாக, இன்றைய போட்டித்தன்மை வாய்ந்த பணியிடச் சூழலில் உலகளாவிய நற்சான்றிதழ்கள், ஆங்கில மொழிப் புலமை, வணிக அறிவு மற்றும் தொழில்முறைத் திறன்களுக்கான தேவை அதிகரித்து வரும் பின்னணியில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளைத் தேடும் கற்போருக்கு இத்திட்டங்கள் மலிவு விலையிலும் நெகிழ்வுத்தன்மையுடனும் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் (online) மற்றும் கலப்பு கற்றல் (hybrid learning) மாதிரிகள் மூலம் வழங்கப்படும் இந்தத் தகைமைகள், கற்போர் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தும் அதேவேளையில், இலங்கையின் எந்தப் பகுதியிலிருந்தோ அல்லது சர்வதேச ரீதியிலோ படிப்பதற்கு வழிவகுக்கின்றன.

ESOL பிரீமியர் கேம்பஸ் மற்றும் OCN லண்டன் இடையிலான இந்தக் கூட்டாண்மையானது, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகைமைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலமும், உயர்கல்வி, தொழில் மேம்பாடு மற்றும் சர்வதேச தொடர் கல்வி வாய்ப்புகளுக்கான நடைமுறைப் பாதைகளை உருவாக்குவதன் மூலமும் பிரித்தானியத் தரத்திலான கல்வியை இலங்கை கற்போருக்கு மிக அருகில் கொண்டு வந்துள்ளது. மேலும், இது சர்வதேச கல்வியைப் பரந்த அளவிலான கற்போர் சமூகத்திற்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் எட்டக்கூடியதாகவும் மாற்றுவதற்கான ESOL பிரீமியர் கேம்பஸின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்