ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

பல்வேறு துறைகளிலிருந்து ஓய்வூதிய வயதை திருத்தியமைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் (Mirigama Base Hospital) புதிதாக நிறுவப்பட்ட சிறுநீரகக் கல் சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  ஜயதிஸ்ஸ, ஓய்வூதிய வயதை நீடிக்குமாறு பல தொழில்முறை குழுக்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த மேன்முறையீடுகளை இறுதி முடிவெடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் (CA), உயர் நீதிமன்றம் (SC) மற்றும் மேல் நீதிமன்றங்களில் (HCs) பணியாற்றும் நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த சில தொழில் வல்லுநர்கள் உட்பட பல துறைகளிலிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக கஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதேபோன்ற கோரிக்கைகள் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளாலும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“தாங்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு தங்கள் கடமைகளைத் தொடர்ந்து செய்யக்கூடிய தகுதியுடன் இருப்பதாகக் கூறி, ஓய்வூதிய வயதை அதிகரிக்குமாறு ஏனைய தொழில் வல்லுநர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகக் குறிப்பிட்ட  ஜயதிஸ்ஸ, எவ்வாறாயினும் அரசாங்கம் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து வருவதாகவும், கவனமான ஆய்வுக்குப் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா