வடக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கு புதிய வீச்சு! யாழ் பல்கலை-கல்வித்திணைக்களம் இணைந்த முயற்சி

வடக்கு மாகாண கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்வித்துறையும், உயர் பட்டப்படிப்புக்கள் பீடமும் இணைந்து, அவர்களது சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஒரு பகுதியாக Edu Insights என்ற பெயரில் வடக்கு மாகாண கல்வி மேம்பாடு தொடர்பான விசேட மாநாடு ஒன்றை,வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்துடன் சேர்ந்து ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் 18ம் திகதி சனிக்கிழமை நடாத்தினர்.
May be an image of dais and text that says 'Norther Province MEDIA Division'
May be an image of studying, eyeglasses, dais and text
க.பொ.த. சாதாரணதரத்தில் வடக்கு மாகாண மாணவர்களின் அடைவு மட்டம் குறைந்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பான ஆராய்வை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்வித்துறை, விஞ்ஞான பீடம், கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீடம், திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த புலமையாளர்கள் மற்றும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம், கல்விமைச்சு என்பவற்றுடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து ஆழமான பல கருத்துக்களை முன்வைத்து, வடக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கான புதியதொரு அறிவுசார் சிந்தனைப் பயணத்தைத்
தொடக்கிவைத்தனர்.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்வித்துறை விரிவுரையாளர் திரு சர்வேஸ்வரா அவர்களின் தொடக்கவுரை மற்றும் கல்வித்துறை விரிவுரையாளர் பிரதீபன் அவர்களின் அறிமுகவுரையுடன் ஆரம்பமான நிகழ்வை, விஞ்ஞான பீடத்தின் புள்ளிவிபரவியல்த்துறையைச் சேர்ந்த கலாநிதி அறிவழகன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கலாநிதி அறிவழகன் அவர்களின் விரிவான தலைமையுரையுடன் ஆய்வு மாநாடு ஆரம்பமானது. பல தசாப்தங்களாக நீடித்துவந்த பரீட்சைமையக் கல்விக்கு முடிவு கட்டி மாணவர்களின் அறிவுசார் அடைவுகளை உயர்த்தும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் முன்மொழிவுகள் பற்றி கலாநிதி அறிவழகன் தமதுரையில் விரிவான விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் நித்திலவர்ணன் அவர்கள் வடக்கு மாகாண மாணவர்களின் க.பொ.த. சாதாரணதர பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கான காரணங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்களுடன் கூடிய தமது ஆய்வை முன்வைத்து உரையாற்றினார். பிரச்சினைகளின் காரணகாரியங்களை ஆராயாமல் அவற்றுக்குத் தீர்வுகாண முடியாது என்ற விடயத்தை வலியுறுத்தி அவரது உரை நிறைவடைந்தது.
தொடர்ந்து திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவாஸ்தீன் அவர்கள் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளின் வீழ்ச்சியைச் சீர்செய்வதற்கான கட்டமைப்பு ரீதியான முன்மொழிவொன்றை முன்வைத்து விளக்கவுரையாற்றினார். அதிபர்களின் தலைமைத்துவம் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறைத்தேர்ச்சி என்பவற்றை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் கல்வி அடைவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது அவரது பிரதான முன்மொழிவாக இருந்தது.
இவரது உரையைத் தொடர்ந்து வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா அவர்கள் க.பொ.த. சாதாரண பெறுபேறுகள் தொடர்பான விரிவான புள்ளிவிபர அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து, வலய ரீதியாக மாணவர்களின் அடைவு நிலைகள் பற்றியும், அடைவுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான சில காரணிகள் பற்றியும் விளக்கி உரையாற்றினார்.
தொடர்ந்து அங்கு ஆய்வுரையை நிகழ்த்திய திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடப் பேராசிரியர் முகுந்தன் அவர்கள், பரீட்சை என்ற நிலையிலிருந்து கணிப்பீடு என்ற பரிமாணத்துக்கு மாற்றமடைந்துள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அளவிடும் முயற்சிகள், வெறுமனே அடைவுகளை அளவீடு செய்வதுடன் மட்டுப்படுத்தப்படாமல், கணிப்பீடு என்பதே ஒரு கற்றல் அனுபவமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
அதன்பின் கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் அதிதரன் தமது ஆய்வுரையில், ஆசிரியத்துவத்துக்கான முக்கியத்துவம் என்பது அவர்களைத் தெரிவுசெய்வது, உருவாக்குவது என்கின்ற முறைமையிலேயே பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியதுடன், க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களை இசட் புள்ளி அடிப்படையில் தெரிவுசெய்து பல்வேறு துறைகளிலும் பட்டக்கல்வியைத் தொடர்வதற்கு அனுமதியளித்துவிட்டு, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகாத அடுத்தநிலையிலுள்ள மாணவர்களே கல்வியியல் கல்லூரி போன்ற ஆசிரிய வளத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு உள்ளீர்க்கப்படும் முறைமையே ஆசிரியத்துவத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாக அமைந்துவிட்டிருப்பதாக அவர் வாதிட்டார்.
இந்த உரைகளின் மத்தியில், ஆசிரிய இடமாற்றம் தொடர்பான சர்ச்சைகள் பற்றியும் சில வளவாளர்கள் சுட்டிக்காட்டிய பேசியமைக்கு பதிலளிககும் வகையில் பிரதம விருந்தினர் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய இடமாற்றங்களில் சில குறைபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்டு பேசியதுடன், பல பாடசாலைகளில் தரமான ஆசிரிய வளங்கள் பாடவேளைகள் வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டு வருவதை தம்மிடம் வந்த சில விடுமுறை விண்ணப்பங்களை ஆராய்ந்தபோது கண்டு தான் வேதனையடைந்ததாகக் கூறியதுடன், இந்த நிலைமையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
அனைத்து உரைகளையும் தொடர்ந்து ஏற்புரையாற்றிய வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பற்ரிக் டிறஞ்சன், ஆசிரிய இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுககைள முற்றாக மறுத்துரைத்ததுடன், வடக்கு மாகாண நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருக்கும் ஆளுநர் இந்த விடயத்தில் தலையீடு செய்வதென்பது நிர்வாக ரீதியான ஒரு பொறுப்பும் அதிகாரமும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
2010ம் ஆண்டுக்கு முன்னர் நிர்வாக ரீதியாக வடக்கு மாகாணம் என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், யாழ்ப்பாணத்தின் நிலைமையை மட்டும் மையமாகக் கொண்டு வடக்கு மாகாண கல்வியை மதிப்பீடு செய்வது சரியான அணுகுமுறையல்ல என்று வாதிட்டார்.
வடக்கு மாகாண கல்வி தொடர்பாக ஆழமான பல பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், எழுந்தமானமாக அறிந்த சில விடயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை முன்வைக்காமல், ஆழமாக விடயங்களை அறிந்துகொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதான ஆய்வுரைகளைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், மாகாணக் கல்வித் திணைக்களத்தைக் குற்றஞ்சாட்டுவது போன்று முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் பதிலளிக்க முற்பட்டபோது, ஒரு கட்டத்தின் இந்தக் கலந்துரையாடல் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்ததாக மாற்றமடைந்தது.
இது ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதை இடையில் தமது கருத்துரையில் வலியுறுத்திக் குறிப்பிட்ட சிகரம் நிறுவனத்தின் நிறுவுநரும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கோ.றுஷாங்கன், மிகச்சிறந்த முன்னெடுப்பான இந்தக் கலந்தாய்வு, புலமை மட்டத்திலான ஆராய்ச்சிகளையும், நிர்வாக மட்டத்திலான களநிலை விளக்கங்களையும் பகிர்கின்ற ஒரு களமாக இருந்ததை சாதகமாக எடுத்துக்கொண்டு, இருதரப்பும் இணைந்து எதிர்காலத்தில் இந்த முன்முயற்சியை வெற்றிகரமாக கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மகாவித்தியாலயம் என்பவற்றின் அனுபவம் மிக்க முன்னாள் அதிபர்கள், யாழ் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர், கல்வி மேம்பாட்டில் ஆர்வம் மிக்க சிரேஷ்ட மருத்துவர்கள், வங்கியாளர்கள் எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்