City of Dreams Sri Lanka தனது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது: ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரம் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு

ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக உருவெடுத்துள்ள ‘City of Dreams Sri Lanka’, தெற்காசியாவில் ஒருங்கிணைந்த ஓய்வு விடுதிகளுக்கான (Integrated Resorts) ஒரு புதிய அளவுகோலையும் நிறுவியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாகவும், இந்த அளவிலான நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த ஓய்வு விடுதியாகவும் திகழும் ‘City of Dreams Sri Lanka’, உலகளாவிய அங்கீகாரம், மறக்க முடியாத விருந்தினர் அனுபவங்கள் மற்றும் நாட்டின் சுற்றுலா இலக்குகளுக்கான நற்பங்களிப்புடன் தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

தனது தொடக்கத்திலிருந்து, ‘City of Dreams Sri Lanka’ ஆடம்பர விருந்தோம்பல், உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள், பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை அனுபவங்கள், சூதாட்டம் (Gaming), சில்லறை வணிகம் (Retail) மற்றும் MICE (மாநாடுகள் மற்றும் நிகழ்வுகள்) வசதிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது.

இந்த முக்கிய மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த ‘City of Dreams Sri Lanka’ நிறுவனத்தின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான மைக்கேல் ஹபாஷி (Michael Habashi): “எங்களது முதலாவது ஆண்டு நிறைவு என்பது எமது குழுவின் அர்ப்பணிப்பு, விருந்தினர்களின் நம்பிக்கை மற்றும் எமது பங்காளர்களின் ஆதரவினால் சாத்தியமான ஒரு நம்பமுடியாத பயணத்தின் கொண்டாட்டமாகும். ஒரே ஆண்டில், ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் ஆகியவை ஒன்றிணைந்து விதிவிலக்கான அனுபவங்களை உருவாக்கும் ஒரு இலக்காக ‘City of Dreams Sri Lanka’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இலங்கையின் நிலையை உயர்த்தும் என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். அத்துடன் புதிய அனுபவங்கள், உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் புதுமையான சேவைகளை எங்களது விருந்தினர்களுக்குத் தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.” என்றார்.

செயல்பாட்டின் முதல் ஆண்டில், பன்னாட்டு ஈர்ப்பைக் கொண்ட நிகழ்வுகள், உணவுக் கலை அனுபவங்கள் மற்றும் உயர்தர விருந்தோம்பல் சேவைகள் மூலம் ‘City of Dreams Sri Lanka’ பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை விருந்தினர்களுக்கு வழங்கியுள்ளது. இரண்டு ஆடம்பர ஹோட்டல்கள், பரந்த அளவிலான உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், ஆடம்பர வாழ்க்கை முறை அனுபவங்கள் மற்றும் அதிநவீன நிகழ்வு இடங்கள் ஆகியவற்றுடன், இந்த ஒருங்கிணைந்த ஓய்வு விடுதியானது கொழும்பை ஓய்வு, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு பயணங்களுக்கான வளர்ந்து வரும் ஒரு மையமாக நிலைநிறுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் எட்டப்பட்ட ஒரு முக்கிய மைல்கல் என்னவென்றால், ‘City of Dreams Sri Lanka’ வணிக வளாகத்தில் உள்ள இரண்டு ஹோட்டல்களும் ஐந்து நட்சத்திரத் தகுதியைப் பெற்றமையாகும். இது உலகத்தரம் வாய்ந்த சேவைத் தரங்களையும் விதிவிலக்கான விருந்தினர் அனுபவங்களையும் வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு விருந்தோம்பல் மையமாகச் செயல்படுவதற்கும் மேலாக, ‘City of Dreams Sri Lanka’ நாட்டின் பொருளாதாரத்திற்குத் தொடர்ச்சியாகக் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகிறது. இந்தத் திட்டம் விருந்தோம்பல், பொழுதுபோக்கு, நிகழ்வுகள், சில்லறை விற்பனை மற்றும் துணைத் துறைகளில் கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதோடு, வெளிநாட்டு முதலீடுகளையும் சர்வதேச பார்வையாளர்களையும் ஈர்க்கும் இலங்கையின் திறனை வலுப்படுத்தியுள்ளது. மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு உலகளவில் போட்டியிடக்கூடிய வசதிகளை வழங்குவதன் மூலம், வணிகச் சுற்றுலாவின் (MICE) வளர்ச்சியை இதன் ஒருங்கிணைந்த சேவைகள் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே இடத்தில் ஆடம்பர தங்குமிடம், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளை விரும்பும் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு போன்ற முக்கிய சர்வதேச சந்தைகளில் இருந்து இப்பகுதிக்கு வரும் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பிராந்திய ரீதியிலான ஈர்ப்பு மற்றும் சர்வதேச பங்காளித்துவங்கள் மூலம், உலகளாவிய பயணிகளுக்கு விருப்பமான ஒரு மையமாக கொழும்பின் நிலையை வலுப்படுத்த ‘City of Dreams Sri Lanka’ இலக்கு வைத்துள்ளது.

சுற்றுச்சூழல் நிலைபேறுதன்மை மற்றும் பொறுப்பான செயல்பாடுகள் ஆகியவை ‘City of Dreams Sri Lanka’ இன் பார்வையில் மையமாக உள்ளன. ‘NUWA’ மற்றும் ‘Cinnamon Life’ ஆகியவற்றின் ஊடாக, பொறுப்பான வள மேலாண்மை, ஆற்றல் திறன் (Energy Efficiency), கழிவுக் குறைப்பு, பல்லுயிர் முன்முயற்சிகள், சமூக ஈடுபாடு மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) அர்ப்பணிப்புகளை இந்த ஓய்வு விடுதி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. இந்த முயற்சிகள், பொறுப்புணர்வுடன் செயல்படும் அதே வேளையில், இலங்கைக்கு நீண்டகால மதிப்பினை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.

எதிர்காலத்தை நோக்குகையில், தெற்காசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஓய்வு விடுதி மையமாகத் தனது நிலையை வலுப்படுத்துவதில் ‘City of Dreams Sri Lanka’ தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதிக அளவிலான சர்வதேச பொழுதுபோக்கு அனுபவங்களை ஈர்ப்பது, ஆடம்பர உணவகங்கள் மற்றும் வாழ்க்கை முறை சேவைகளை விரிவுபடுத்துவது, MICE மற்றும் நிகழ்வுகள் பிரிவை வளர்ப்பது, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் முதலீடு செய்வது மற்றும் விருந்தினர்களின் ஒவ்வொரு பயண அனுபவத்தையும் மேம்படுத்துவது ஆகியவை இதன் எதிர்காலப் பார்வையில் அடங்கும்.

‘City of Dreams Sri Lanka’ தனது அடுத்த அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஆதரவளிப்பதோடு, உலகெங்கிலும் உள்ள பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அனுபவங்களைத் தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து