உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் மனித புதைகுழிகள் -வல்வை அனந்தராஜ்

இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் மனித புதைகுழிகள் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் உள்ளளதாக வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் செயலாளர்வல்வை அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை” வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட “வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கை” யின் நூல் வெளியீட்டு நிகழ்வும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வல்வெட்டித்துறை படுகொலையின் நேரடி சாட்சியமாக நான் இப்போது இருக்கின்றேன்.
உயிரோடு இருக்கின்றவர்களில் நான் முக்கியமானவனாகயிருக்கின்றேன்.
இந்திய இராணுவம் வல்வெட்டித்துறை மீது மேற்கொண்ட படுகொலை தாக்குதலை தொடர்ந்து பிரஜைகள் குழுவின் தலைவர் என்ற வகையில என்மீதுஏற்கனவே அவர்களுக்கு இருந்த கோபத்தில் என்னை பழிவாங்குவதற்காகஎன்னை கைதுசெய்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரி முகாமில மூன்று நாள் தடுத்துவைத்திருந்தார்கள்.
நான் அங்கு மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டேன் அடித்து துன்புறுத்தி காயப்படுத்தினார்கள் ஏதோ ஒருவகையில் இரண்டு உயர் அதிகாரிகள் வந்து என்னை விடுவித்ததால் நான் இன்று உயிருடன் இருக்கின்றேன்.
என்னை பிடித்துக்கொண்டு போய் அடுத்த நாள் என்னிடம் ஒரு கடிதத்துடன் வந்தார்கள்
நீங்கள் பிரஜைகள் குழுவின் தலைவர் என்ற வகையில நீங்கள் எங்களிற்கு ஒரு கடிதம் தரவேண்டும்உங்களோட நாங்கள் பிடித்துக்கொண்டு வந்த பத்து இளைஞர்களும் இரவுதப்பியோடி விட்டார்கள் என நீங்கள் கடிதம் தரவேண்டும்என அந்த கடிதத்தின் மூலம் கேட்டிருந்தார்கள்
பத்து பேரும் தப்பியோடிவிட்டார்கள் என நீங்கள் ஒரு சாட்சியாக கையெழுத்துவையுங்கள் என கேட்டார்கள்.


நான் அவர்களிடம் “எனக்கு முன்னால் நீங்கள் பிடித்துக்கொண்டு போனீர்கள் இரவிரவாக தாக்கப்பட்டு அலறும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்ததுசுற்ற வர ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இங்கு இருக்கின்றீர்கள்எப்படி அவர்கள் தப்பிபோவார்கள் நான் இதில கையெழுத்து வைத்தேன் என்றால் அது எனது மக்களிற்கு நான் செய்கின்ற துரோகமாகத்தான் அமையும் நான் துரோகியாகத்தான் பார்க்கப்படுவேன்” என சொன்னேன்.
நான் கையெழுத்திடமாட்டேன் என சொன்னேன் அதற்கு கேர்ணல் தர அதிகாரியொருவர் அப்பிடியென்றால் நீ இந்த இடத்தை விட்டு போக முடியாது என்றார்
நான்” பரவாயில்லை இந்த பத்துபேரும் எனது மாணவர்கள் என்னிடம் படித்தவர்கள் சின்னப்பிள்ளையிலிருந்து என்னிடம் படிச்ச பொடியள் எங்கட கண்ணிற்கு காணாமல்போகும்போது நான் அவர்களுடன் சேர்ந்து காணாமல்போவது பெரிய விடயமில்லை” என்று சொன்னேன்.
நீங்கள் என்னவாவது செய்யுங்கோ என்று சொல்லிவிட்டு நான் கையெழுத்து வைக்கவில்லை.
அதிஸ்டவசமாக மூன்றாவது நாள் இரண்டு பிரிகேடியர்கள் வந்து என்னை பார்த்து ஆச்சரியப்பட்டு வீட்டை கொண்டுபோய் விட்டார்கள்.
இதுக்குல்ல என்ன நடந்தது என்றால் அன்றிரவு முழுக்க அந்த மாணவர்களை பிடித்து அடித்து கொலை செய்து அந்த பள்ளிக்கூடத்துக்குள்ளேயே தாட்டிருகின்றார்கள்.
உடுப்பிட்டி மகளிர்கல்லூரியில்  இன்று அந்த மனித புதைகுழி இருக்கின்றது அதனை நாங்கள் சரியான முறையில் முன்னெடுப்போம் என்றால் ஸ்கான் பண்ணி எங்க எங்க புதைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிந்துவிட்டுஇந்திய இராணுவத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் முறைப்பாடுகளை செய்யவேண்டிய தேவை உள்ளது.
இது சாதாரண விடயமில்லை எங்கயோ இருந்து வந்த அந்நிய நாட்டு இராணுவம் எங்கட மண்ணில வந்து எங்கட மக்களை கொன்றொழித்தார்கள் இதனை நாங்கள் பாத்துக்கொண்டிருக்கின்றோம்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்