விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமார் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் விலக்கிக்கொள்ள மறுத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மதகுருமாரை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ள கொழும்பு நீதிமன்றம் நேற் விடுக்கப்பட்ட உத்தரவை விலக்கிக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவு மீறப்பட்டால் பொலிஸார் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.