இந்துசமுத்திரத்தை பாதுகாப்பதற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும் என இந்தியாவின் அடுத்த பிரதமநீதியரசர் நீதிபதி சூர்யா காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூழல்தொடர்பான ஒத்துழைப்புகள் என்பது நன்கொடையோ அல்லது இராஜதந்திரமோ இல்லை மாறாக உயிர்வாழ்தலிற்கு அத்தியாவசியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இந்திய இலங்கை கடல்களின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஒரு காலத்தில் அவை பரிமாற்ற தமனிகளாக விளங்கினஇநம்பிக்கை கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை சுமந்து சென்றன என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் சுற்றுச்சூழல் அரசியலமைப்புவாதத்தின் பிராந்திய மாதிரியை முன்னோடியாகக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.கூறினார் கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
இந்தியா மற்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் ஒன்றில்ஒன்றுசார்ந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்தியப் பெருங்கடலை இரு நாடுகளின் மக்களையும் கலாச்சாரம் நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மூலம் இணைக்கும் ஒரு வரலாற்றுப் பாலம் என்று விவரித்தார்.
“பாக் ஜலசந்தியின் அமைதியான நீலக்கடல் நீரின் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளன – கரையோரங்களில் மிதக்கும் எண்ணெய் கசிவுகள்- பகிரப்பட்ட வெப்பமயமாதல் நீரோட்டங்களின் கீழ் பவளப்பாறைகள் வெளுத்துப்போகின்றன- ” என்று அவர்எச்சரித்துள்ளார்
மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் இரு நாடுகளின் தலைநகரங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் தங்கியுள்ளன என அவர்குறிப்பிட்டுள்ளார்
ஒரு காலத்தில் பல்லுயிர் பெருக்கத்தின் மையங்களாக இருந்த பாக் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா தற்போது அதிகப்படியான மீன்பிடித்தல் அழிவுகரமான இழுவைப் படகுப் பிடிப்பு மற்றும் கட்டுப்பாடற்ற கடலோர நடவடிக்கைகளால் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய இழுவைப் படகுகளுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே மீண்டும் மீண்டும் ஏற்படும் மோதல்கள் “ஒரு ஆழமான சுற்றுச்சூழல் சோகத்தை எடுத்துக்காட்டுகின்றன – தீர்ந்துபோன வளத் தளத்திற்கான போட்டி” என்று அவர் என அவர்குறிப்பிட்டுள்ளார்