ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸினை மறுசீரமைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உறுதியான திட்டம் எதனையும் தயாரிக்கவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள்எனினும் இலாபத்தை அதிகரிப்பதற்காக தனியார் துறையுடன் சாத்தியமான கூட்டாண்மைகளிற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
2025 மார்ச் 31ம் திகதியளவில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் இழப்புகள் 2.73 பில்லியனாக காணப்பட்டது என ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 134.6 வீத இழப்புகள் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுதிட்டத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸினை மறுசீரமைப்பதற்கான திட்டம் எவ்வாறானதாகயிருக்கும் என்ற கேள்விக்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் ஆனால் அரசாங்கத்தின் சார்பில் எதனையும் தெரிவிக்க முடியாது என ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையுடன் கூட்டாண்மைக்கு தயாரா என்ற கேள்விக்கு இலாபத்தை அதிகரிப்பதற்காக அவ்வாறான கூட்டாண்மைக்கு தயராகவுள்ளோம் என சரத்கனெகொட தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின்படி இலங்கை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரச ஸ்தாபனங்களை மறுசீரமைக்கவேண்டும்.
