கொல்லப்பட்ட வெலிகம பிரதேசசபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவின் இறுதிகிரியைகளில் கலந்துகொண்டு அவருக்கு இறுதிஅஞ்சலி செலுத்திய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதேச சபை தலைவiர் பொதுமக்களை சந்திக்கும் தினத்தில் இடம்பெற்ற இந்த கொலை ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசசபை தலைவரின் கொலையை கண்டித்துள்ள அவர் அமைதியான முறையில் வாழ்வதற்கான பொதுமக்களின் உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வன்முறை கலாச்சாரத்தின் ஒருபகுதியே இந்த கொலை என குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரதேச சபை தலைவர் பொலிஸ் பாதுகாப்பை கோரியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் நீதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.