கொழும்பு மாவட்டத்தில் 230000 மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகியுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத்வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தென்மாகாணத்திலேயே அதிகளவு மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகியுள்ளனர் பாதளஉலக குற்றச்செயல்களும் இங்கேயே அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்குரச கொடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வின் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில்230,980 மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தென்மாகாணம் ஏனைய அனைத்து மாகாணங்களையும் பின்தள்ளிவிட்டுநாட்டை இந்த நெருக்கடியை நோக்கி தள்ளுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
