2025ம் ஆண்டின் மிகவும் வலுவான ஆபத்தான புயல் ஜமைக்காவை நெருங்கிக்கொண்டுள்ள நிலையில் உயிராபத்து பேரழிவு நிலை குறித்து எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன
அமெரிக்காவை தளமாக கொண்ட தேசிய ஹரிக்கேன் நிலையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

15 முதல் 30 இன்ச் மழை குறித்து எச்சரித்துள்ள அமெரிக்காவின் தேசிய ஹரிக்கேன் நிலையம் கியுபா பஹாமாசின் தென்பகுதி ஆகியனவும் பாதிக்கப்படலாம் பெருமளவு மண்சரிவு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடிய காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு கியுபாவில் சிறிய அலைகளுடன் தரைமட்டத்திலிருந்து வெளிப்புறமாக 13 அடிக்கு புயல் அலைகள் எழலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஹெய்ட்டி டொமினிகன் குடியரசு பஹாமாசின் சில பகுதிகள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளத்தையும் மண்சரிவையும் எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இதேவேளை ஜமைக்காவின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயமாக வெளியேற்றுமாறு அந்த நாட்டின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
