2026 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக காணப்படும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
2026ம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பினை 3.1வீதமாக மாற்றியுள்ள சர்வதேச நாணயநிதியம் சமீபத்தைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை எதிர்பார்த்ததை விட வலுவான விதத்தில் மீட்சிக்கு திரும்புவதால் அந்த போக்கினை அடிப்படையாக வைத்து 2026ம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பினை மாற்றியுள்ளது.
2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இலங்கை குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளது என சர்வதேச நாணயநிதியத்தின்ஆசிய பசுபிக் திணைக்களங்களிற்கான பிரதிஇயக்குநர் தோமஸ் ஹெல்பிலிங் தெரிவித்துள்ளார்.
.சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தால் நெருக்கடிக்குப் பிறகு இலங்கை வளர்ச்சியில் வலுவான மீட்சியைக் கண்டது”என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாக ஆகவும் இந்த ஆண்டின் முதல் பாதியில் 4.8 வீதமாக ஆகவும் இருந்தது. இந்த மீட்சியில் சில பொருளாதார நடவடிக்கைகளில் இயல்பாக்கம் காரணமாக ஏற்பட்டன மேலும் சில விளைவுகள் தற்காலிகமானவை. இப்போது பொருளாதாரம் அதன் போக்கு வளர்ச்சியான 3.1வீதமாக திரும்புவதைக் காண்கிறோம்.என அவர் தெரிவித்துள்ளார்.