ஊழல் இல்லாத கொள்கை தொடர்ந்தால் இலங்கையில் ஜேர்மனியின் முதலீடுகள் அதிகரிக்கும் – இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை முழுமையாக பயன்படுத்தவில்லை – இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர்

இலங்கையில் தற்போது ஜேர்மனியின் 300 வணிககுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் பெலிக்ஸ் நியுமென் அதிகாரத்துவம் துரிதமாக செயற்பட்டால்,ஊழல் இல்லாத கொள்கை தொடர்ந்தால், முதலீடுகள் பாதுகாக்கப்பட்டால், இலங்கையில் ஜேர்மனியின் முதலீடுகள் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செயற்படும் ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து எனக்கு கிடைத்துள்ள கருத்துக்கள் இவையே என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் காணப்படும் சூழ்நிலையை பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் காணப்படும் சூழ்நிலையுடன் ஒப்பிட்ட பின்னரே ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையில் இயங்க தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டமைப்பை அல்லது உலையை நிறுவுவதற்கான அனுமதி இலங்கையில் எவ்வளவு காலத்தில் கிடைக்கும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் எவ்வளவு காலத்திற்குள் கிடைக்கும் என்பதை ஜேர்மனியின் நிறுவனங்கள் ஒப்பிடுவது வழமை என அவர் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய நிலை ஜேர்மனியின் பாதுகாப்பு நலன்களுடன் பொருந்தக்கூடியது என தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் அமைதியான ஒரு பிராந்தியம்,இந்திய பெருங்கடல் முழுவதும் சுதந்திரமான கடல்பயணத்திற்கான கொள்கை உள்ளது, இலங்கை இந்த பகுதியில் மிகப்பெரிய நாடு இல்லை ஆனால்
ஆனால் அது இந்தியப் பெருங்கடலின் மையத்தில்இ உலகின் மிக முக்கியமான சர்வதேச கப்பல் பாதைகளில் சிலவற்றில் அமைந்துள்ளது. இயற்கையின் காரணமாக இலங்கையில் ஆழ்கடல் துறைமுகங்கள் உள்ளன அவை இந்த உலகளாவிய வர்த்தகக் கோடுகளுக்கு அவசியமானவை. எனவே ஜெர்மனியின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி மற்றும் வளமான சமூகத்துடன் கூடிய நிலையான ஜனநாயக இலங்கைஇ இந்தியப் பெருங்கடலின் இந்த முக்கிய கட்டத்தில் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கிறதுஎன தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியுடன் வர்த்தக உபரியை அனுபவிக்கும் சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.
“இலங்கை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதை விட இலங்கைக்கு நாங்கள் குறைவாகவே ஏற்றுமதி செய்கிறோம். ஜெர்மனி ஐரோப்பாவின் மையத்தில் உள்ளதுஇ மேலும் எங்கள் செல்வம் பெரும்பாலும் ஐரோப்பிய சந்தையை அணுகுவதை அடிப்படையாகக் கொண்டது. ஜெர்மனி உலக மேற்பரப்பில் ஒரு சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கியிருந்தாலும் அது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியைக் குறிக்கிறது. இதற்காக ஒரு பொதுவான சந்தையில் எங்களுடன் ஈடுபடும் கூட்டாளிகள் எங்களுக்குத் தேவை. என தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சந்தையில் இலங்கைக்கு சலுகை பெற்ற அணுகலை வழங்கும் புளுPூ திட்டத்திற்கு ஜெர்மனியின் ஆதரவை எடுத்துரைத்த அவர் அந்த வசதியால் வழங்கப்படும் வாய்ப்புகளை நாடு முழுமையாகப் பயன்படுத்தவில்லைஎன தெரிவித்துள்ளார்.

“செல்வத்தின் தூணின் கீழ்இ இலங்கைப் பொருளாதாரம் ஜிஎஸ்பிபிளஸ் வரிச்சலுகையை பன்முகப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்