உலக பொருளாதாரத்தின் அடித்தளமாகயிருந்த சுதந்திரவர்த்தகம் மற்றும் முதலீட்டின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க்கார்னி எச்சரித்துள்ளார்.
தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய பசுபிக் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கான பகிரங்கமான செய்தியில் இதனை தெரிவித்துள்ள கனடா பிரதமர் 1989 பேர்ளின் சுவர் வீழ்ச்சிக்கு பின்னர் உலக பொருளாதாரம் ஆழமான மாற்றங்களை சந்தித்து வந்த நிலையில் விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சுதந்திரம் பொருளாதாரம் தற்போது செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட,தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டின் நிலையான விரிவாக்கத்தின் பழைய உலகம், நமது நாடுகளின் செழிப்பு,கனடாவின் பெரும்பகுதி,உட்படஒரு உலகம் அந்த உலகம் போய்விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தை நம்பியிருக்கும் பாரம்பரியத்திலிருந்து கனடா விலகிச்செல்லும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ள கனடா பிரதமர்அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா இல்லாத ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
வர்த்தகபோரின் விளிம்பிலிருந்து அமெரிக்க சீன தலைவர்கள் பின்வாங்கிய மறுநாள் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டசுதந்திர வர்த்தகத்தின் முடிவு குறித்த கனடா பிரதமரின் உரை வெளியாகியுள்ளது.
அமெரிக்க சீன தலைவர்கள் மத்தியிலான இணக்கப்பாட்டினை உலக தலைவர்கள் வரவேற்றுள்ளனர் அதேவேளை உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் தலைவர்களிடையே உள்ள ஆழமான கருத்துவேறுபாடுகளை இது நினைவுபடுத்தியுள்ளது.