ஆப்பிளின் சமீபத்தைய ஐபோன்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டிம் குக் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் செப்டம்பரில் அதன் மிக மெல்லிய ஐபோனான ஏரை மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடல்களுடன் வெளியிட்டது இது நிறுவனத்திற்கு ஒரு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலம் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஒட்டுமொத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தை விட 12 வரை
வீதம்வரைஅதிகமாக இருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கணித்துள்ளது.
ஆனால் செப்டம்பரில் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஐபோன் விற்பனைக்கான மதிப்பீடுகளை ஆப்பிள் நிறுவனம் மிகக் தவறவிட்டது. இதற்கு பல ஐபோன் மாடல்களுக்கான விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் தான் காரணம் என்று நிறுவனத்தின் தலைவர் டிம் குக் தெரிவித்துள்ளார்.
