கொழும்பிற்கு வெளியே ஹோட்டல்களை கட்டுவதன் அவசியம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் விஜிதஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் போதுமான அளவு ஹோட்டல்கள் உள்ளன ஆனால் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் போதியளவு ஹோட்டல்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக ஹோட்டல் உரிமையாளர்கள் கொழும்பிற்கு வெளியே முதலீடு செய்து ஹோட்டல்களை கட்டவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் இதற்கான நிலங்களை வழங்க தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை சுற்றுலாத்துறையிடம் பல நிலங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை பதுளை யாழ்ப்பாணம் அம்பாறை போன்றபகுதிகளில் குறைந்தளவு ஹோட்டல்களே உள்ளன என தெரிவித்துள்ள அவர் அங்கு ஹோட்டல்களை கட்டுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்,நாங்கள் ஹோட்டல் உரிமையாளர்களிற்கு வாய்ப்பை வழங்கியுள்ளோம்,உங்கள் முதலீட்டு யோசனைகளை சமர்ப்பிக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்தி கேட்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.