இலங்கையின் பேரிடர் தொடர்பான இழப்புகளை உலக வங்கி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிட்டுள்ள நிலையில், 31,000 புதிய வீடுகளைக் கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு வலுவான திட்டமிடல் மற்றும் ஆதரவின் அவசியத்தைப் பற்றிப் பேசிய ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுப் பணப்புழக்கம் காரணமாக, 1977 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை தனது அதிகபட்ச வரவு செலவுத் திட்ட உபரியைப் (Budget Surplus) பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், இயற்கை பேரிடர்களைத் தாங்குவதற்கு வலுவான பொருளாதாரம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்
சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இதனால் சுமார் 18,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி திஸாநாயக்கதெரிவித்துள்ளார் . சேதமடைந்த பல வீடுகள் வசிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இது குறித்த விரிவான அறிக்கை இன்னும் தயாரிக்கப்பட்டு வருகிறது.என அவர் தெரிவித்துள்ளார்
இந்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக பாதுகாப்பான இடங்களில் சுமார் 25,000 புதிய வீடுகள் கட்டப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதோடு, எதிர்கால பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 வரவு செலவுத் திட்டத்தில் மொத்தம் 31,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளனஎன அவர் தெரிவித்துள்ளார்
