சுகாதாரச் சேவை நெருக்கடியில்: 16  பிரதி பணிப்பாளர் நாயகம்  பதவிகள்வெற்றிடம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முக்கிய பதவி உட்பட, அரச சுகாதார சேவையில் 16 பிரதி பணிப்பாளர் நாயகம் (DDG) பதவிகள் வெற்றிடமாக உள்ள நிலையில், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் சுமூகமான செயல்பாட்டைப் பேணுவதில் சுகாதார அமைச்சு கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி எச்சரித்துள்ளார்.

ஹன்சக விஜேமுனி, கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பதவி உட்பட மேற்படி பதவிகளை நிரப்புவது தொடர்பாக பொதுச் சேவை ஆணைக்குழு (PSC) கடந்த சில மாதங்களாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் தெரிவித்துள்ளார்..

தற்போது 16 பிரதி பணிப்பாளர் நாயகம் பதவிகள் ‘பதில் கடமை’ (Acting basis) அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.. கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பதவிக்கு பொதுச் சேவை ஆணைக்குழு ஒரு பரிந்துரையை வழங்கியிருந்த போதிலும், அந்தப் பரிந்துரைக்கு எதிராகப் புகார்கள் முன்வைக்கப்பட்டதைக் காரணம்காட்டி பின்னர் அதனை மீளப் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.. எவ்வாறாயினும், பெப்ரவரி 20ஆம் திகதி, பொதுச் சேவை ஆணைக்குழு தனது இறுதிப் பரிந்துரையை வழங்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தது என்றும், அது தற்போது அமைச்சை வந்தடைந்திருக்கலாம் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நிரந்தர பிரதி பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதில் அமைச்சு தவறியுள்ளமை, வைத்தியசாலை சேவைகளை வழங்குவதிலும் ஒப்பந்தப்புள்ளிகளை (Tenders) வழங்குவதிலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக .கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 12 மாதங்களாக பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் ஒருவரை மட்டுமே கொண்டுள்ள நிலையில், நாட்டின் முதன்மையான மூன்றாம் நிலை சுகாதார சேவை வழங்குநரான இந்த நிறுவனம், தனது சேவைகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய பதில் நிர்வாகி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் இருப்பதால் (இதுவும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு முன்னணி அரச வைத்தியசாலையாகும்), அவரால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்காக ஒரு சில மணிநேரங்களை மட்டுமே ஒதுக்க முடிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர். சேவை வழங்குநர்களுக்கு கால நீடிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், சேவை வழங்குநரை மாற்றுவதற்கோ அல்லது தற்போதுள்ள சேவை வழங்குநருக்கு முறைப்படி ஒப்பந்தத்தை வழங்குவதற்கோ ஆண்டுதோறும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சூழ்நிலை, தொடர்புடைய ஒப்பந்தங்களை வழங்குவதற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (Technical Evaluation Committee) அமர்வுகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது – இதில் ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கான பாதுகாப்பு சேவையை வழங்குவதாகும். உதாரணமாக, அரசிற்குச் சொந்தமான நில மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் (Land Development Corporation) துணை நிறுவனமான RDC சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது. வைத்தியசாலை வாகன நிறுத்துமிடத்தில் அடிக்கடி நிகழும் திருட்டுகள், போதைப்பொருள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் மிக முக்கியமாக, ஒப்பந்தப்புள்ளிகளை வழங்கும்போது நோயாளிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு கவலைகளை வைத்தியசாலை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதிலும் சரியான அளவுகோல்கள் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை என்று மூலங்கள் குறிப்பிட்டன. மேலும், முறையான கண்காணிப்பு நுட்பம் தற்போது இல்லை என்பதை அறிந்தே, ஒப்பந்தப்புள்ளிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கூட ஒழுங்கற்ற முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியசாலையில் இரண்டு பிரதி பணிப்பாளர்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கும் அதிக பணிச்சுமை காரணமாக இத்தகைய விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த நேரமில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான நோயாளிகளுக்குச் சேவையாற்றும் இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர பிரதி பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு நிபுணத்துவ மூலங்கள் அமைச்சை வலியுறுத்தியுள்ளன

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்