விவசாயிகளின் உற்பத்திகளிற்கு நியாயமான விலைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக யாழ்மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் -இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம்

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுரண்டலற்ற முறையில் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளுக்கு நியாய விலை கிடைப்பதற்கு வழியேற்படுத்துவதும் நோக்கில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் யாழ். மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும்இ வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்றது.
““GoVimar” என்னும் ஒன்றிணைந்த அணுகுமுறையூடாக விவசாய உற்பத்திகளுக்கு நிலைபேறான தீர்வை நோக்கி நகர்த்துவதனுடன் விவசாயிகளை தொழில்முனைவோராக்கும் முயற்சியில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் நவீன தகவல் தொழில்நுட்ப பொறிமுறையில் அமைந்த தொகுதித் தொழில்நுட்ப (Block Chainn) வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு அதைச் செயற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இந்த அமைப்பு தனது சேவைகளை வடக்கு மாகாணத்துக்கும் விரிவாக்குகின்றது. இது தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ஆகியனவற்றுடன் இணைந்து விவசாயிகள்இ விவசாய கம்பனிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் களப் பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.
இது தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலையைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியிலிருந்து விற்பனை வரையில் இடம்பெறுவதால் சிறப்பானதாக அமையும் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அடுத்த மாதமளவில் யாழ். மாவட்டத்தில் இரண்டு இடடங்களில் தமது கொள்வனவு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்