ஐஎம்எஃப் (IMF) திட்டத்தின் முடிவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அரசாங்கத்திடம் ரவி கருணாநாயக்க கேள்வி

இலங்கையின் சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் முடிவுகள் மற்றும் தற்போதைய உடன்படிக்கைக்கு அப்பாற்பட்ட நாட்டின் பொருளாதார மூலோபாயம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு, அதன் விரிவடைந்த நிதி வசதியின் (EFF) கீழ் ஐந்து மற்றும் ஆறாவது கூட்டு மீளாய்வுகளுக்கு ஒப்புதல் அளித்து, இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்கடொலர் மதிப்பிலான அடுத்த தவணைப் பணத்தை வெளியிட அனுமதித்துள்ள நிலையிலேயே இக்கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் இவ்விடயத்தை எழுப்பிய கருணாநாயக்க, IMF உடன்படிக்கை இன்னும் ஏழு மாதங்களில் முடிவடையவுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 2023 இல் ஆரம்பிக்கப்பட்ட IMF-EFF திட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் நிதி ரீதியான விளைவுகளை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா என்பதை வெளிப்படுத்துமாறு கோரினார்.

அத்தகைய மதிப்பீட்டின் மூலம் இத்திட்டத்தின் நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளனவா என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய அவர், அந்த நோக்கங்களின் விபரங்களையும் அவை எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உயர்ந்த வரிகள், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் செய்த தியாகங்கள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நல்வாழ்வையும் மேம்படுத்தியுள்ளதா என்று அரசாங்கம் நம்புகிறதா என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், IMF ஆதரவு திட்டத்தின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், வெளிநாட்டு முதலீட்டு வரவு மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் ஆகியவை நனவாகியுள்ளனவா, இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்றும் கருணாநாயக்க வினவினார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் (SMEs), சுயதொழில் செய்பவர்கள், மாதச் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது IMF ஆதரவு சீர்திருத்தங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா என்பது குறித்த விபரங்களையும், அத்தகைய மதிப்பீட்டின் முடிவுகளையும் அவர் கோரினார்.

புதிய IMF உடன்படிக்கை ஒன்றிற்குள் நுழையாமல், தனது பொருளாதார மீட்சியைத் தொடர்வதற்குத் தேவையான பொருளாதார ஸ்திரத்தன்மையையும் கடன் மறுசீரமைப்பு நிலைத்தன்மையையும் இலங்கை அடைந்துள்ளதாக அரசாங்கம் கருதுகிறதா என்றும் எம்பி கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு IMF திட்டம் பரிசீலிக்கப்படாத பட்சத்தில், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கும், கடன் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மற்றும் பொது நலனைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் மாற்று மூலோபாயம் என்ன என்பதை விளக்குமாறு அவர் கோரினார்.

தற்போதைய IMF திட்டக் காலத்தில் முழுமையாக அடையப்படவில்லை என்று தான் கருதும் முடிவுகளை, இத்தகைய மாற்று மூலோபாயம் எதிர்காலத்தில் எவ்வாறு சாத்தியமாக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமன்றி, இலங்கையின் IMF திட்டத்திற்கான மொத்தச் செலவு (அதன் முதிர்ச்சியின் போது செலுத்த வேண்டிய மூலதனம் மற்றும் வட்டி கொடுப்பனவுகள் உட்பட) விபரங்களைக் கோரியதுடன், 2028 முதல் 2048 வரையிலான வருடாந்த வெளிநாட்டுக் கடன் செலுத்த வேண்டிய பொறுப்புகள், அசல் மற்றும் வட்டி கொடுப்பனவுகள் மற்றும் நாட்டின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்குத் தேவையான வருடாந்த அமெரிக்க டொலர் தேவைகள் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்