இலங்கையின் முன்னணி மலர் மற்றும் அன்பளிப்பு பிராண்டான லஸ்ஸானா.கொம் (Lassana.com), அண்மையில் சினமன் கிராண்ட் கொழும்பு (Cinnamon Grand Colombo) ஹோட்டலில் தனது புதிய மலர்க் கிளையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த நடவடிக்கை கொழும்பின் விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறை (lifestyle) துறையில் இந்த பிராண்டின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தரத்திலான மலர் பரிசுகள் மற்றும் திருமண மலர் அலங்கார சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்த புதிய கிளை, கொமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) சனத் மனதுங்க மற்றும் லஸ்ஸானா.கொம் பிராண்ட் தூதுவரும், முன்னாள் உலக அழகி இலங்கை (Miss Sri Lanka World) வெற்றியாளருமான அநுடி குணசேகர ஆகியோரால் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் லஸ்ஸானா குழும நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கலாநிதி லசந்த மாலவிகே, மலர் பிரிவின் தலைவர் பீட் டி ஜாங் (Piet De Jong), சினமன் கிராண்ட் கொழும்பின் பொது மேலாளர் நசூமி அஸார் மற்றும் லஸ்ஸானா புளோரா வெடிங்ஸ் நிறுவனத்தின் சொகுசு திருமணங்களுக்கான மேலாளர் யூசுப் சிராஜுதீன் ஆகியோருடன் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்.