நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்கக் கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி

நெல்லுக்கான நியாயமான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி நகரிலுள்ள சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகள் மற்றும் வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நெல்லுக்கான நிர்ணய விலையை உடனடியாக அறிவித்து நடைமுறைப்படுத்துமாறு கோரி தயாரிக்கப்பட்ட மகஜர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜர் ஜனாதிபதி அவர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், விவசாய அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
நெல் உற்பத்திக்கான செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் உரிய நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்