பொதுபலசேனாவின் ஞானசாரதேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் போது ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தன்னை தவறாக வழிநடத்தியதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப தவறே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைத்திரிபாலசிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது
ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களையும் அதன் விளைவுகளையும் அவ்வேளை எனக்கு முழுமையாக தெரிவிக்க தவறினார்கள் அல்லது தவறாக சித்தரித்தார்கள்
அவ்வேளை ஞானசார தேரர் ஹோமகம நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை எதிர்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் சட்டவிவகாரங்களுக்கு பொறுப்பாகயிருந்த மேலதிக சிரேஸ்ட செயலாளர் பொதுமன்னிப்பு வழங்குவது என்றால் நீதிமற்றும் சிறைச்சாலை அமைச்சின் அனுமதி அவசியம் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர்கள் நீதியமைச்சிற்கு அவசியமான ஆவணங்களை அனுப்பிவைக்கவில்லை,உரிய அனுமதியை பெறாமலே எனது கையொப்பத்தை பெற்றனர்.
இது என்னை ஏமாற்றும் ஒரு செயல்,
பாக்கியோசோதி சரவணமுத்து தொடபுடைய அமைப்பொன்றின் பங்களிப்புடன் சந்தியா எக்னலிகொடசமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவில், எனது பதவிக்காலத்தில் அதிகாரிகள் செய்த தவறே ஞானசாரதேரர் மீண்டும் சிறை செல்ல காரணமாகயிருந்தது.
இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றேன்,தீர்ப்பு சரியானது என்பதே ஏற்றுக்கொள்கின்றேன்.எனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் இழைக்கப்பட்ட தவறுக்காக பௌத்த மகாசங்கத்தினரிடம் நான் மன்னிப்பை கோருகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்
.