10 மாதங்களில் 1 லட்சம் பேர் பணிநீக்கம்.. கூகுள் முதல் டிசிஎஸ் வரை பணிநீக்கத்துக்கு ஏஐ தான் காரணமா?

ஐடி மற்றும் டெக் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிக மோசமான ஒரு ஆண்டாக மாறியிருக்கிறது. டெக் நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

கூகுள், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய நிறுவனங்களில் கோடிங் வேலைகளை ஏஐ கருவிகள் வசம் ஒப்படைத்து விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன . ஊழியர்களும் தங்களுடைய அன்றாட பணிகளில் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் பிறப்பித்திருக்கின்றன.

10 மாதங்களில் 1 லட்சம் பேர் பணிநீக்கம்.. கூகுள் முதல் டிசிஎஸ் வரை பணிநீக்கத்துக்கு ஏஐ தான் காரணமா?
இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை மனிதர்களின் வேலை வாய்ப்பை மிக வேகமாக பறித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் உலகின் முன்னணி நிறுவனங்களான மெட்டா, அமேசான், டிசிஎஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளன. டெக் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தால் நிகழும் தானியங்கி முறை மாற்றமே இந்த பணி நீக்கத்திற்கு மிக முக்கிய காரணம்.

Layoff.fyi என்ற தளம் உலகம் முழுவதும் 212 டெக் நிறுவனங்கள் 91,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை இதில் காட்டப்படுவதை விட அதிகமாக தான் இருக்கும் .பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான உண்மையான எண்ணிக்கையை அறிவிக்கவில்லை என்பதால் உண்மையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருக்கும்.

ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்ததால் அந்த வேலையில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள், மற்றொரு புறம் ஏஐ நுட்பங்களை கற்று பயன்படுத்தும் திறன் இல்லாதவர்கள் என கருதப்படுபவர்கள் நீக்கப்படுகிறார்கள். சில நிறுவனங்கள் ஏஐ பிரிவில் வேலை செய்பவர்களையும் கூட நீக்கி வருகின்றன.

மெட்டா: மெட்டா நிறுவனம் தங்களுடைய ஏஐ பிரிவை வலுப்படுத்துவதற்காக தேடி தேடி ஆட்களை பணிக்கு அமர்த்தியது . இதற்காக சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்ற ஒரு தனி பிரிவையே உருவாக்கியது . ஆனால் கூடிய விரைவில் இந்த பிரிவில் வேலை செய்யக்கூடிய 600 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது . ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தது. மெட்டா நிறுவனம் 2022 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சுமார் 30000 பேரை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது.

அமேசான்: உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் தங்கள் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை வேலையில் இருந்து நீக்க இருக்கிறது . அமேசான் நிறுவனத்தை பொருத்தவரை பெரும்பாலான வேலைகளை தானியங்கி முறைக்கு மாற்றி வருகிறது. குறிப்பாக ரோபோடிக்ஸ் மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் அதிக அளவு முதலீடு செய்திருக்கும் அமேசான் நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய கிடங்குகளில் மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்பு பறிபோக இருக்கிறது. அமேசான் நிறுவனம் ஹெச்.ஆர் பிரிவில் வேலை செய்யும் 15 சதவீத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறதாம்.

மைக்ரோசாப்ட்: மற்றொரு முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் தங்கள் ஊழியர்களை சுமார் 15,000 பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது .விற்பனை, மார்க்கெட்டிங் பொறியியல் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் தங்கள் ஊழியர்களில் 25 ஆயிரம் பேரையும், சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம் 8000 பேரையும் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.

டிசிஎஸ்: அக்செஞ்சர் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்துடன் தகவமைத்து கொள்ள முடியாத 11 ,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. .

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு