சவுதி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும்உத்தர பிரதேச. இளைஞர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

உத்தர பிரதேசம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர், சவுதி அரேபி​யா​வில் வேலை பார்க்க சென்​றுள்​ளார். அவருக்கு பாலை​வனத்​தில் ஒட்​டகம் மேய்க்​கும் வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வேலை மிக​வும் சிரம​மாக உள்​ள​தால் அவர் தாய்​நாடு திரும்ப விரும்​பு​கிறார். ஆனால், அவரது முதலாளி கபில் என்​பவர், தொழிலா​ளி​யின் பாஸ்​போர்ட்டை வாங்கி வைத்​துக்​கொண்​டு, கொன்​று​விடு​வ​தாக மிரட்​டி​யுள்​ளார். அந்த இளைஞர் சமூக ஊடகத்​தில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர், ‘‘எனது கிராமம் அலகா​பாத். நான் வேலை பார்க்க சவுதி அரேபியா வந்​தேன். எனது பாஸ்​போர்ட் கபில் என்​பவரிடம் உள்​ளது. நான் வீட்​டுக்கு போக வேண்​டும் என அவரிடம் கூறினேன். ஆனால், அவர் என்னை கொன்​று​விடு​வ​தாக மிரட்​டு​கிறார். நான் என் அம்​மா​விடம் செல்ல விரும்​பு​கிறேன். எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து​விடு​வேன்’’ என உருக்​க​மாக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது. இதையடுத்து சவுதி தலைநகர் ரியாத்​தில் உள்ள இந்​திய தூதரகம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘நாடு திரும்ப வேண்​டு​கோள் விடுத்த உ.பி. இளைஞரை கண்​டு​பிடிக்க முயற்​சிக்​கிறோம். அவர் சவுதி அரேபி​யா​வில் எங்கு பணி​யாற்​றுகிறார், தொலைபேசி எண், முதலாளி யார்? என்ற விவரம் வீடியோ​வில் இல்​லை’’ என தெரி​வித்​துள்​ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை