https://www.telegraph.co.uk/
மியன்மாரில் வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மோசடிநிலையங்களை நடத்தும் குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்கள் அவர்களிடம் சிக்குண்டுள்ள தொழிலாளர்களை கொலை செய்து ஆற்றில் வீசுவது விசாரணையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பல ஆசிய நாடுகளில் இருந்து வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்குள் கடத்தப்பட்டநூற்றுக்கணக்கானவர்கள் இந்த கும்பலிடம் சிக்குண்டிருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.
உள்ளே சிக்குண்டவர்களை வெளியே செல்வதற்கு குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்கள் அனுமதிப்பதில்லை,அவர்கள் தங்கள் கடன்களை அடைக்கும் வரை சைபர் மோசடி வேலைகளில் பல மணிநேரம் ஈடுபடுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அவர்களை மியன்மாருக்கு வேலைக்காக கொண்டு சென்றதற்கான( கடத்திச்சென்றமைக்கான) செலவையே குற்றவாளி கும்பல் கடன் என அழைக்கின்றது.
அவர்கள் போதியளவு உழைக்காவிட்டால் அவர்களை சித்திரவதை செய்கின்றனர் சில சந்தர்ப்பங்களில் கொலை செய்கின்றனர்.

மியன்மாருக்கு அருகில் உள்ள தாய்லாந்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் மோய் ஆற்றில் ஒரு சடலத்தை கண்டதாக தெரிவித்தார், சைபர் மோசடி நிலையத்தை சேர்ந்த அடிமையின் உடலாக அது இருக்கலாம் என தெரிவித்த அவர் அந்த சடலம் தண்ணீருக்குள் காணப்பட்டது- வெள்ளை தோல்- இராணுவீரர் போல தலைமுடியை வெட்டியிருந்தார்,பருமனானவர் நான் என் கண்ணால் பார்த்தேன் என உள்ளுர் ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.
மோசடி நிலையங்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அறிவது சாத்தியமில்லை.ஆனால் மியன்மார் நவ் மற்றும் பிரச்சட்டாய் ஆகியவை மேற்கொண்ட விசாரணைகளின் போது மியன்மாரின் இந்தகுற்றவாளி கும்பல்கள் என்ன செய்கின்றன என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைபர் மோசடி கும்பல்களினால் ஈர்க்கப்படுபவர்களில் முதலில் தாங்கள் தகவல்தொழில் நுட்பம் போன்ற வேலைகளிற்காக தெரிவு செய்யப்படுவதாக கருதுகின்றனர்.
இவர்களை தாய்லாந்து தலைநகரிலிருந்து மோயி ஆற்றுப்பகுதிக்கு கொண்டு சென்று மியன்மாருக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த மோசடிவேலைவாய்ப்பு நிலையங்களில் பலர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக பல வருடங்களாக தகவல்கள் கிடைத்துள்ளன.ஆனால் உள்ளே சிக்குண்டவர்கள் சிறிதளவு பணம் கூட உழைப்பதில்லை.
எங்களை போன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அவர்கள் மோசமாக நடத்துவதில்லை ஆனால் யாரையாவது அடிக்குமாறு எங்களிற்கு உத்தரவிட்டால் நாங்கள் அதனை செய்தே ஆகவேண்டும்,நாங்கள் மறுத்தால் அவர்கள் எங்களை நம்பமாட்டார்கள்,உத்தரவை ஏற்பவர்கள் சித்திரவதைகளில் ஈடுபடவேண்டு;ம்,மிகமோசமான சித்திரவதைகளை நாங்கள் பார்க்க செய்தார்கள் என இந்த மோசடி நிலையத்தில் பணிபுரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் எங்கள் விசாரணயின் போது தெரிவித்தார்.
மோசடி கும்பல் குறிப்பிடும் இலக்கினை மோசடி மூல்ம் உழைக்க முடியாதவர்கள் பல தடவை தாக்கப்படுவார்கள்,தப்பி செல்ல முயல்பவர்கள் உணவு வெளிச்சம் இல்லாத இருட்டு அறைக்குள் தள்ளப்படுவார்கள்,இரண்டாவது தடவை தப்ப முயன்றால் கொல்லப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
