எல்ஐசி நிதி ரூ.34,251 கோடி அதானி குழுமத்திற்கு தாரைவார்ப்பு மோடி அரசின்இரகசிய உதவித் திட்டம் -தி வாஷிங்டன் போஸ்ட்

அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளேடான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நடத்திய விரிவான புலனாய்வில், கடன் நெருக்கடி மற்றும் சர்வதேச விசாரணைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானிக்கு உதவுவதற்காக, ஒன்றிய அரசாங்கமே ஒரு பிரத்யேக உதவித் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்திய அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழ கம் (எல்ஐசி) எனும் பொதுத்துறை நிறுவனத்தின் நிதியில் இருந்து சுமார் 3.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.34,251 கோடி) மதிப்பிலான முத லீடுகளை அதானி குழும நிறுவனங்க ளுக்குத் திருப்பிவிட, ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அதி காரிகளே திட்டமிட்டுள்ளனர் என்பது, பிரத்தியேகமாகப் பெறப்பட்ட உள் நாட்டு ஆவணங்கள் மற்றும் அதி காரிகளின் நேர்காணல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதானியின் திடீர் எழுச்சியும், ஆளும் கட்சியின் ஆதரவும்
கவுதம் அதானி என்ற இந்தப் பெயர், 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உலகத் தொழிலதிபர் தரவரி சையில் 600 இடங்களுக்கு பின்னால் இருந்தது. ஆனால், 2014-இல் நரேந் திர மோடி பிரதமரான பின்பு அதானி யின் அசுர வளர்ச்சி நாட்டின் பிர பல தொழிலதிபர்களில் ஒருவராக அவரை திடீரென உருவெடுக்க வைத்தது.
ஒன்றிய அரசின் வரிச் சலுகை, அரசுத் திட்டங்களை வாரி வழங்குதல் மற்றும் கடனுதவி ஆகி யவையே அதானியின் திடீர் எழுச் சிக்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகளும் பொருளா தார நிபுணர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மோடி பிரதமர் ஆன பின்பு அதானி காட்டில் அடைமழை தான்.
அதானியின் துறைமுக நிறுவனம் நாட்டின் சரக்குகளில் சுமார் 27 சத விகிதத்தைக் கையாள்கிறது. அதன் எரிசக்தி அலகுகள் நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மிகப்பெரிய தனியார் துறை உற் பத்தியாளர்களாக உள்ளன.


மேலும், 2022-ஆம் ஆண்டில் நாட்டின் மிக முக்கியமான ஆங்கிலச் செய்தி சேன லான என்டிடிவி-யின் கட்டுப்பாட்டுப் பங்கையும் அதானி குழுமம் வாங்கி யது.
சர்வதேச நெருக்கடியும், கடன் மறுப்பும்
இத்தகைய சூழலில் தான், 2023 ஜனவரியில் அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பங்கு கையாளு தல் மற்றும் கணக்கு மோசடியில் ஈடு பட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் மதிப்பு ரூ. 12.5 லட்சம் கோடியாக சரிந் தது. மேலும், லஞ்சம் மற்றும் மோச டிக் குற்றச்சாட்டுகள் காரணமாக அமெரிக்க நீதிமன்றங்களில் அதானி மற்றும் அவரது உறவினர்கள் மீது குற்றவியல் மற்றும் சிவில் வழக்கு கள் தொடரப்பட்டன.
இதனால், ஐரோ ப்பா மற்றும் அமெரிக்க வங்கிகள் அதானி குழுமத்திற்குப் புதிய கடன் கள் வழங்க மறுத்து, வந்த வழி யிலேயே விரட்டிவிட்டன. இந்தக் கடன் நெருக்கடியைச் சமாளிக்கவும், இழந்த தொகையை மீட்கவும் மோடி அரசு வழக்கம் போல வரிச்சலுகை மற்றும் அரசுத் திட்டங்களை வாரி இறைத்தது. ஆனாலும், உலக அளவில் அதானி யின் பங்குகள் மீளவில்லை.
ரகசியமாக வடிவமைக்கப்பட்ட உதவித் திட்டம்
இந்த நெருக்கடியில் அதானி குழு மத்திற்கு உதவ, 2025 மே மாதம் மோடி தலைமையிலான இந்திய அரசாங் கம் சொந்த உதவித் திட்டத்தை வடி வமைத்தது. H பொதுநிதித் தாரைவார்ப்பு: ஏழை மற்றும் கிராமப்புற குடும்பங்க ளுக்கு ஆயுள் காப்பீடு வழங்கு வதற்குப் பொறுப்பான- ஒன்றிய அர சுக்குச் சொந்தமான நிறுவனமான எல்ஐசி மூலம் அதானியின் துறை முக நிறுவனத்தின் ரூ. 5,000 கோடி உள்நாட்டுக் கடன் பத்திரங்கள், வேறு முதலீட்டாளர்கள் வாங்காத நிலையில், முழுவதுமாக வாங்கப் பட்டன.
ஆவண ஆதாரம்: இந்தக் கொள்முதல், அதானிக்கு உதவ இந்திய அதிகாரிகள் வரி செலுத்துவோரின் பணத்தைத் திருப்பிவிட மேற்கொண்ட ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்பதை, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட ஆவணங்கள் உறுதி செய் கின்றன.
டிஎப்எஸ் பங்கு: ஒன்றிய நிதி அமைச்ச கத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறையின் (டிஎப்எஸ்) அதிகாரிகளால் வடி வமைக்கப்பட்ட இத்திட்டம், எல்ஐசி மற்றும் அரசின் சிந்தனைக் குழுவான ‘நிதி ஆயோக்’ ஆகியவற்றுடன் இணைந்து உரு வாக்கப்பட்டது.
மேலும், இது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமைச்ச கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் இந்த விவகாரத்தை நன்கு அறிந்த அதி காரிகள் தெரிவித்துள்ளனர். முதலீட்டு இலக்கு: அதானி குழுமத் தின் மீதான ‘நம்பிக்கையை சமிக்ஞை செய்வது’ மற்றும் ‘மற்ற முதலீட்டா ளர்களை ஊக்குவிப்பது’ ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் அடங்கும் என டிஎப்எஸ் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எல்ஐசி பங்குகளை அதிகரிக்க அதிகாரிகளின் பரிந்துரை
அதானி குழுமத்தில் எல்ஐசியின் முத லீட்டை மேலும் 3.9 பில்லியன் டாலர் அளவில் அதிகரிக்க அதிகாரிகள் வரைவு செய்தனர். Hபத்திரங்கள் கொள்முதல்: சுமார் 3.4 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்ப்பரேட் பத்திரங்களை அதானி நிறுவனங்களில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
பங்கு அதிகரிப்பு: எல்ஐசி நிதியைப் பயன் படுத்தி சுமார் 507 மில்லியன் டாலர் (ரூ. 4,452 கோடி) தொகையில் அதானியின் நிறுவனங்களில் அதன் பங்குகளை அதி கரிக்கவும் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
அதன்படி, அதானி கிரீன் எனர்ஜியில் எல்ஐ சியின் பங்குகளை 1.3 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகவும், அதன் சிமெண்ட் பிரிவான அம்புஜா சிமெண்ட்ஸில் 5.69 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகவும் பங்குகளை உயர்த்த அதிகாரிகள் முன்மொழிந்தனர்.
H அதிக ஆபத்து: 10 ஆண்டு அரசுப் பத்தி ரங்களை விட அதானியின் பத்திரங்கள் அதிக வருவாய் ஈட்டித் தரும் என்ற வாதத்தின் அடிப்படையில் இந்த முதலீட்டுக்கு அதி காரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், அதானியின் பங்குகள் சர்ச்சைகளால் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகும் என்றும், இது எல்ஐசிக்கு ஆபத்தானது என்றும் அதே ஆவணங்கள் எச்ச ரிக்கின்றன.
‘குரோனி முதலாளித்துவம் உயிருடன் இருக்கிறது’
இந்த விவகாரம் குறித்து நிபுணர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். H டிம் பக்லியின் விமர்சனம்: ஆஸ்திரேலிய நிபு ணரான டிம் பக்லி, “கோடீஸ்வரருக்கு இந்தி யா நன்கு ஆதரவளித்து வருகிறது. இந்த ஆதரவு, அதானி வேறுபட்ட விதிகளின் மூலம் செயல்பட அனுமதிக்கப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. நான் இந்திய அரசாங்கத்திற்கு மிக உயர்ந்த முன்னு ரிமைகள் இருப்பதாக நினைத்திருப்பேன்.
ஆனால், குரோனி முதலாளித்துவம் (அரசு மற்றும் அதிகாரிகளுடன் நெருங்கிய உறவு) உயிருடனும், உதைத்துக் கொண் டும் இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
நிதி நிபுணரின் கருத்து: இந்திய நிதி நிபுணர் ஹேமிந்திர ஹசாரி, “இந்திய அர சாங்கம் அதானியை ஆதரிக்கிறது. அத னால் அதானிக்கு எந்தத் தீங்கும் மற்றும் வேறு எந்த பிரச்சனையும் வர அனு மதிக்காது” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
பொதுநிதிப் பாதுகாப்பு: எல்ஐசி போன்ற ஒரு குறைந்த ஆபத்துள்ள பொதுத்துறை நிறு வனம், அதானியின் பத்திரங்களில் முதலீடு செய்வது அதன் முக்கிய இலக்கான ஏழை மக்களுக்கான காப்பீட்டிற்கு உகந்ததல்ல என்றும், மேலும் வணிகத் தொல்லைகள் ஏற்பட்டால் அது காப்பீட்டு நிறுவனத்தை “பேரபாயத்தில்” தள்ளும் என்றும் நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.
மறுக்கும் அதானி குழுமம் மற்றும் எல்ஐசி!
அதானி குழுமம் இந்தப் புகார் குறித்து, “தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒன்றிய அரசு முடிவுகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது” என்று கூறியுள்ளது.
எல்ஐசியும், “அதானி குழுமத்திற்கு நிதி யைச் செலுத்த ஒரு வழிகாட்டுதல் அல்லது அத்தகைய எந்த ஒரு திட்டமும் ஒருபோ தும் தயாரிக்கப்படவில்லை” என மறுத் துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு