ஒயிட் காலர் ஊழியர்களுக்கு மட்டும் சிக்கல்.. கொத்தாக பறிபோகும் வேலை! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இப்போது உலகின் பல முன்னணி நிறுவனங்களில் கூட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் பேர் வேலையிழந்து வருகிறார்கள். இப்படித் திடீரெனப் பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க என்ன காரணம்..

உலகின் பெரிய நிறுவனங்கள் கூட இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சமீபத்தில் அமேசான் கூட 14000 ஆட்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது
அமெரிக்காவின் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனம் கடந்த 22 மாதங்களில் 14000 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அதேபோல் டார்கெட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் தங்களது கார்ப்பரேட் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன.

அதாவது ஒயிட் காலர் வேலைகள் கடுமையாகச் சரிந்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளன.

பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்களுக்கும் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் கணக்கியல் மோசடி கண்காணிப்பு திட்டமிடல் மற்றும் ஹெச்ஆர் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.. முன்பு அதிகச் சம்பளம் பெறும் நிபுணர்களால் கையாளப்பட்ட சில பணிகள் இப்போது ஏஐ வசம் மாற்றப்படுகின்றன.

மேலும் நவீனத் தொழில்நுட்பம் குறித்துத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இப்போது வேலைவாய்ப்புகள் உள்ளன. இது வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தால் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அனுபவம் வாய்ந்தவர்கள் கூட சிரமப்படுகிறார்கள்.

அதேநேரம் எல்லாத் துறைகளிலும் இதே நிலைமை என சொல்ல முடியாது.. வர்த்தகம் சுகாதாரம் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் தேவை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒயிட் காலர் வேலைகள் குறைகிறது.. உடல் ரீதியான வேலை தேவைப்படும் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இது தொடர்பாகச் சமீபத்தில் வேலையிழந்த ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில் “ஐடி துறையில் நான் தகுதியானவன்.. ஆனால் எனக்கு அந்த வேலைகள் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் டெலிவரி செய்யும் வேலைகளைச் செய்து வருகிறேன்” என்றார்.

இப்போது ஒயிட் காலர் பணியாளர்கள் மூன்று பக்கத்தில் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு பக்கம் ஆடோமேஷன் இன்னொரு பக்கம் புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க மறுப்பது மற்றொரு பக்கம் அதிக போட்டி! இப்படி மூன்று பக்கங்களில் இருந்தும் அழுத்தம் அதிகரிக்கிறது. முன்பு நிம்மதியாக ஒரு கார்ப்பரேட் வேலைகளில் இருந்த ஊழியர்களும் கூட இப்போது பிரஷரை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்
வேலையிழந்த ஊழியர்கள் தங்களை அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.. செயற்கை நுண்ணறிவு டேட்டா ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்துவது அவசியம். அப்போது தான் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நெட்வோர்கிங் வேலைக்காக வெளியூர்களுக்கு செல்ல தாயாராக இருப்பது ஆகியவையும் முக்கியமானது.

இப்போது வேலைவாய்ப்பு சந்தையில் குழப்பம் நிலவி வருவதால் 6 முதல் 12 மாதங்களுக்குத் தேவைப்படும் ஒரு எமர்ஜென்சி நிதியை உருவாக்கி வைக்க வேண்டும். மேலும் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைப்பது ஆபத்தான முதலீடுகளை நிறுத்துவது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்கிறார்கள்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு