இலங்கையில் வளமுள்ள மாகாணம் வடக்கு மாகாணம் வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றமை வேதனையானது-இந்தோனேசியா தூதுவரிடம்வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷியா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான இந்தோனேஷpயத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர்இ பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர்இ வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில்  வெள்ளிக்கிழமை  (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் விவரித்தார். வடக்கு மாகாணத்தின் பல்வேறு தேவைகளையும் தற்போதை அரசாங்கம் கண்டறிந்து நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர் இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கு மாகாணம் மிகப்பெரிய அபிவிருத்திக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வளமுள்ள மாகாணம் வடக்கு மாகாணம் எனத் தெரிவித்த ஆளுநர் வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றமை வேதனையானது எனக் குறிப்பிட்டார். விவசாயம் மீன்பிடி இரண்டுக்கும் மிகப்பெரிய வாய்ப்புக்கள் உள்ளபோதும் பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக அவற்றை மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் இல்லாமை பெரும் பின்னடைவாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

விவசாயத்தில் குறிப்பாக நெற்பயிர்ச் செய்கையில் இந்தோனேஷியா முன்னணியில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்களுடைய அனுபவங்கள் எங்கள் விவசாயிகளுடன் பகிரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறுகிய காலத்தில் நெல் உற்பத்திஇ நவீன முறைமை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பகிரப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தோனேஷpயாவின் விவசாய முறைமை உள்ளிட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்ட தூதுவர் குறிப்பாக கலப்பு உரப்பாவனையையும் அதன் வெற்றியையும் சுட்டிக்காட்டினார். விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல காலநிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நாடு என்ற அடிப்படையில் அவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுக்கின்றீர்கள் என்பது தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது எமது மாகாணத்துக்கு தற்போதைய சூழலில் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்தோனேஷியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் ஏற்பட்டது என்றும் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை எனவும் குறிப்பிட்ட தூதுவர் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பகிர்ந்து கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது