துபாய் Air Show-வில் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம்

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.

துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமான கண்காட்சி 2025 தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான இன்று, இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர்.

 

இந்நிலையில், தேஜாஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விமானி வெளியேறிவிட்டாரா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய விமானப் படை, “விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில், துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான் கண்காட்சியின் போது இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.

உயிர் இழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் தேஜாஸ்  போர் விமானம் முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. இந்நிலையில், தற்போது துபாயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதன் வீடியா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்