சூறாவளியின் தாக்கம் காரணமாக 15000-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன -ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம்

சூறாவளியின் தாக்கம் காரணமாக 15000-க்கும் மேற்பட்ட வீடுகள் வீடுகள் அழிந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

மேலும் 200-க்கும் மேற்பட்ட வீதிகள்பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன குறைந்தபட்சம் 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன மேலும் ரயில் வலையமைப்பு மற்றும் தேசிய மின்கட்டமைப்பின் சில பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம்  தெரிவித்துள்ளது

ஆரம்ப மதிப்பீடுகளின்படி 25 மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 998918 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 212 மரணங்கள் பதிவாகியுள்ளன மேலும் 218 பேர் காணாமல் போயுள்ளனர். தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் 51இ000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 180000-க்கும் அதிகமானோர் 1094 அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

சூறாவளி நவம்பர் 28 அன்று கரையைக் கடந்து மீண்டும் வங்காள விரிகுடாவுக்குச் சென்றது. இது 2000-களின் முற்பகுதியில் இலங்கை கண்டிராத மிகக் கடுமையான வெள்ளப் பெருக்குகளில் சிலவற்றைத் தூண்டியது.

கம்பஹா கொழும்பு புத்தளம்மன்னார்திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய நிலச்சரிவுகள் கண்டிஇ பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சிதைத்துள்ளன.

யாழ்ப்பாணம் போன்ற வடக்கு மாவட்டங்களில் மின்சாரம் மொபைல் மற்றும் தகவல்தொடர்பு மற்றும் போக்குவரத்து வலையமைப்புகளில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது மேலும் முழு கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் சுத்தமான நீர் விநியோகம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதாகப் பதிவாகியுள்ளதால் சுத்தமான குடிநீர் கிடைப்பது ஒரு பெரிய கவலையாகவே நீடிக்கிறது.

இலங்கையின் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக ழுஊர்யு தெரிவித்துள்ளது.

பல மாவட்ட வைத்தியசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன மற்றும் குறைந்த அளவிலான விநியோகங்களை மட்டுமே பெறுகின்றன. கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் செயற்படும் வசதிகளுக்கு வான்வழியாக மாற்றப்படுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெள்ளம் காரணமாக நோய்க்காவிகள் மூலம் பரவும் நோய்கள உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களின் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது என்று எச்சரித்துள்ளது.  உணவுப் பாதுகாப்பு மற்றும் முடிந்தவரை பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு சமூகங்களை அது வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் உள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பதிலளிப்பை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமை அதன் அவசரகால ஒருங்கிணைப்பு அமைப்பைச் செயலில் வைத்துள்ளது.

உணவுப் பாதுகாப்ப சுகாதாரம நீர் மற்றும் கல்வி பாதுகாப்பு தங்குமிடம் மற்றும் ஆரம்ப மீட்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்இ மிகவும் அவசரமான இடைவெளிகளைக் கண்டறியும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் ஒரு பல்துறை தேவைகள் மதிப்பீடு நடைபெற்று வருகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்