மின்சாரக் கட்டணங்கள்: உயர்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என நுகர்வோர்  கோரிக்கை

இலங்கை மின்சார சபை (CEB) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56% கட்டண உயர்வை முன்மொழிந்துள்ள நிலையில், இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான செலவுகள் நுகர்வோருடன் நேரடியாகத் தொடர்பில்லாதவை என்றும், எனவே விலையேற்றம் நியாயமற்றது என்றும் மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, முன்மொழியப்பட்டுள்ள செலவு விபரங்களை உன்னிப்பாக கவனித்தால், அதில் பெரும் பகுதி நுகர்வோர் மீது சுமத்தப்பட வேண்டியவை அல்ல என்பது தெரியவரும் என்றார்.

“இந்த முன்மொழிவில் உள்ள பெரும்பாலான செலவுகள் நுகர்வோருக்குத் தேவையற்றவை. விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான (Voluntary retirement scheme) கொடுப்பனவுகள் கூட இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையாகவே கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இங்கு இல்லை. மாறாக, நுகர்வோருக்கு ஏதேனும் ஒரு வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.”

மின்சார சபைக்குள் நிலவும் முறையற்ற திட்டமிடல் மற்றும் நிர்வாகக் சீர்கேடுகளால் ஏற்படும் நிதிச் சுமைகளை நுகர்வோர் சுமக்கக் கூடாது என்றும், எனவே இந்த அதிகரிப்பிற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். “அவர்கள் எப்போதும் நுகர்வோரைச் சுரண்டவே முயற்சிக்கிறார்கள். தரமற்ற நிலக்கரி இறக்குமதி இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம். இப்போது அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளை நுகர்வோர் மீது சுமையாக ஏற்றி சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். எந்தவொரு சரியான திட்டமும் இன்றி பணத்தைச் செலவழித்துவிட்டு, இறுதியில் அதற்கான விலையை நுகர்வோர் செலுத்த வேண்டியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் 15,847 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிட்டுள்ள இலங்கை மின்சார சபை, நிதி மற்றும் செயல்பாட்டு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், மின் விநியோகத்தின் நம்பகத்தன்மைக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இந்த 13.56% உயர்வு அவசியம் எனக் கூறி, சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவை PUCSL இடம் சமர்ப்பித்துள்ளது. மதிப்பீடுகளில் ஏற்படும் மேலதிகத் தொகை அல்லது பற்றாக்குறைகள் அடுத்த கட்டண திருத்தத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2026 இன் முதல் காலாண்டிற்காக 11.57% கட்டண உயர்வை மின்சார சபை கோரியிருந்தது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படாததால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனையடுத்து, இரண்டாம் காலாண்டிற்கான முன்மொழிவை பிப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை