சூறாவளிக்குபிந்தைய தேவைகளை மதிப்பீடு செய்ய கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) பிற்பகல் இலங்கை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இக்குழுவினரை தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் ஏனைய அதிகாரிகள் வரவேற்றனர்.

‘டிட்வா’ (Ditwah) சூறாவளி ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் அதன் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த மதிப்பீட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் நாளை (17) காலை கம்பளைப் பகுதிக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கள ஆய்வைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் கொழும்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்தப் பேரிடருக்குப் பின்னரான இலங்கையின் மீட்சி முயற்சிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும், மறுகட்டமைப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்