இலங்கை முன்னெடுத்துள்ள விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்துள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் தொடர்பாடல் இயக்குநர் ஜூலி கொசாக் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கை முன்னெடுத்துள்ள விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்துள்ளது.
இது நெருக்கடிக்கு பிந்தைய வலுவான பொருளாதார மீட்சி நிலையையும் மேம்பட்ட ஆரோக்கியமான நிதிநிலையும் குறிக்கின்றது.
சர்வதேச நாணயநிதியம் தனது ஈஎவ்எவ் ஏற்பாட்டின் ஐந்தாவது மதிப்பீட்டினை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இந்த உத்வேகம் தொடாகின்றது.
இது நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயமாகும்.

