நிதி திட்டமிடலில் அதிகரிக்கும் பெண்களின் பங்கு!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

 

நிதி திட்டமிடலில்… குடும்பத்தின் நலம், நிதி சுதந்திரம், முதலீடு, கடன் மேலாண்மை மற்றும் நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதில்… பெண்களின் பங்கு முக்கியமானது. பெண்கள் நிதி முடிவுகளை எடுத்து, நிதி சார்பின்றி சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் (Financial Freedom) செல்வத்தை உருவாக்குவதும், தங்கள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள் பெரும்பாலும் தங்கள் சிக்கன சேமிப்பு பழக்க வழக்கங்களால் குடும்ப நிதியை திறம்பட நிர்வகிக்கிறார்கள். இது செல்வத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது.  பெண் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நிதி சந்தையில் பெண்களின் ஈடுபாட்டை காட்டுகிறது.

குடும்பத்தின் நிதித் தேவைகளை நிர்வகிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. பெண்கள் தங்களின் நிதியை (finance) திறம்பட நிர்வகிப்பதுடன், சரியான முடிவுகளை எடுப்பது, நிதி சார்பின்றி இருப்பது அதிகரித்து வருகிறது. இவர்கள் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் சொத்துக்கள் போன்ற பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் செல்வத்தை உருவாக்க முடியும்.

நிதி திட்டமிடலில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் காரணிகள்:

a) நிதி அறிவும் கல்வியும்:

நிதி (finance) கல்வியறிவை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் நிதி சேர்க்கையும் அதிகாரமளித்தலும் மேம்படுகிறது. இது பெண்களின் நிதி நம்பிக்கையை அதிகரித்து, சிக்கலான நிதி அமைப்புகளை வழி நடத்தவும், சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. உயர் கல்வி மற்றும் தொழில்முறைப் பயிற்சி, பெண்களை முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபடச் செய்து அவர்களின் நிதி பங்கேற்பை அதிகரிக்கிறது.

b) தொழில்முனைவு:

தொழில் முனைவில் ஈடுபடுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற முடிகிறது. புதிய வணிகங்களை உருவாக்குவதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர். இது நிதி சுதந்திரத்திற்கு உதவுவதுடன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

நிதி திட்டமிடலில் ஈடுபடுவது பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் நிதி விவகாரங்களில் அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக உணர வைக்கிறது.

c) டிஜிட்டல் நிதி மற்றும் ஃபின்டெக் (Fintech):

டிஜிட்டல் நிதி சேவைகள் மற்றும் ஃபின்டெக் தளங்கள் பெண்களுக்கு நிதித் துறையில் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. டிஜிட்டல் நிதி சேவைகளின் வளர்ச்சி, பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பை எளிதாக்குகிறது. வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பெண்களை சேர்ப்பது, அவர்களின் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்