செப்டம்பர் மாதத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தை இலங்கையின் சுற்றுலாத்துறை ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலும் தக்கவைத்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34046சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் இது செப்டம்பரில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து ஒரு வலுவான தொடக்கமாகும்.
ஒரு நாளைக்கு சராசரியாக 5299 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகின்றனர்
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 25965 சுற்றுலாப்பயணிகளுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு ஆண்டு 14வீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது
இது தெற்காசிய பயணத் தலமாக இலங்கை மீதான தொடர்ச்சியான நம்பிக்கையைக் குறிக்கிறது.
இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மூல சந்தையாக உருவெடுத்துள்ளது
