இலங்கை மின்சாரசபை தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணயநிதியம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக எரிசக்தி துறை சீர்திருத்தங்களில் குறிப்பாக இலங்கை மின்சாரசபை பிரித்தல் மற்றும் செலவு-பிரதிபலிப்பு விலையை பராமரித்தல் ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் நேற்று வலியுறுத்தியது.
இலங்கை மின்சாரசபையை பிரித்தல்மற்றும் 2026 மற்றும் அதற்குப் பிறகு எரிசக்தி துறை மேற்கொள்ளவிருக்கும் பரிணாம வளர்ச்சியைச் சுற்றியுள்ள முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகிறோம்.”என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணயநிதியத்தின் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
“சீர்திருத்தம் என்பது எரிசக்தித் துறையின் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையான செயல்பாட்டைக் கொண்டுவருவதற்கான மிக முக்கியமான படியாகும். சர்வதேச நாணயநிதியத்தின் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
