இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட ஹோட்டல் திட்டத்தினை-கிராண்ட் செரண்டிப்கொழும்பு -சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நேற்று கொழும்பு ஷாங்க்ரி-லாஹோட்டலில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த திட்டம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க முதலீடு என தெரிவித்துள்ள அமைச்சர் இது இலங்கையின் சுற்றுலாத்துறையில் உள்ள சாத்தியப்பாடுகளை வெளிக்காட்டி நிற்கின்றது செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதன் மூலம் இது இலங்கையின் சுற்றுலாத்துறையையும் விருந்தோம்பல் துறையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜதந்திரிகள் சர்வதேச உள்நாட்டு ஹோட்டல் பல்கலைகழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
