டிரம்பின் சீனாவிற்கு எதிரான 100வீத வரி அறிவிப்பு- மொத்தமாக சரிந்து விழுந்த பிட்கொய்ன் கிரிப்டோமார்க்கட் வோல்ஸ்ரீட் சந்தைகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மென்பொருளுக்கு டொனால்ட் டிரம்ப் 100 வீதவரி விதித்ததை அடுத்து கிரிப்டோ சந்தை கடுமையான சரிவைக் கண்டுள்ளது (வுசரஅp வுயசகைக ழுn ஊhiயெ). பிட்காயின் மற்றும் எத்தேரியம் உள்ளிட்ட பல கிரிப்டோகரன்சிகள் குறைந்துவிட்டன. சீனா அரியமண்தாதுக்களின்
ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்களை அறிவித்ததை தொடர்ந்து சீனாவின் நிலைப்பாட்டை “மிகவும் ஆக்கிரோஷமானது” என்று வர்ணித்த டிரம்ப் நவம்பர் 1 2025 முதல் சீனா மீது 100 வரியை வீதஅறிவித்தார் இது சந்தையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்க்கியுள்ளது.

வரும் வாரங்களில் சீனாவிலிருந்து வரும் அனைத்து “முக்கியமான மென்பொருட்களுக்கும்” அமெரிக்கா புதிய 100 வீதவரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். டிரம்பின் அறிக்கை கிரிப்டோகரன்சிகள் மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் ஒரு பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் பங்குகள் பிட்காயின் மற்றும் எத்தேரியம் எல்லாமே மொத்தமாக வீழ்ச்சியடைந்துள்ளன. மொபைல் போன்கள் கணினி சில்லுகள் பேட்டரிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற தொழில்நுட்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான அரிய பூமி தாதுக்கள் மீது சீனா புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து டிரம்பின் இந்த முடிவு வந்துள்ளது.

“நவம்பர் 1 2025 முதல் (அல்லது அதற்கு முன்னதாக சீனா மேலும் நடவடிக்கை எடுத்தால்) அமெரிக்கா சீனா மீது ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேல் 100 வீதவரியை விதிக்கும். அன்று முதல் அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எழுதினார். “கிட்டத்தட்ட ஒவ்வொரு தயாரிப்புக்கும்” சீனா பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியம் என்று டிரம்ப் கூறினார். அவர் இதை “சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். தற்போது அமெரிக்கா சீன தயாரிப்புகளுக்கு 30 வீத வரியை விதிக்கிறது. டிரம்பின் புதிய அறிவிப்புக்குப் பிறகு இந்த விகிதம் மொத்தம் 130மூ ஆக அதிகரிக்கும்.

வர்த்தகப் போர் குறித்த பயம் காரணமாக முதலீட்டாளர்கள் கிரிப்டோ மற்றும் தொழில்நுட்பப் பங்குகள் போன்ற ஆபத்தான முதலீடுகளிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் கருத்துக்கள் அமெரிக்க பங்குச் சந்தைகளையும் பாதித்தன.

இந்த மாதம் தென் கொரியாவில் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் இனி அதற்கான அவசியமில்லை என்று டிரம்ப் கூறினார். அமெரிக்கக் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு கூடுதல் துறைமுகக் கட்டணங்களை அறிவித்ததன் மூலம் சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்