சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்கும் அந்திய செலாவணி வருமானம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் காணப்பட்டதை விட 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வீதம் அதிகமாக காணப்பட்டது என தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆகஸ்ட் மாதம் சுற்றுலாத்துறை மூலம் 182.9 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜூன் ஜூலை மாதங்களில் வீழ்ச்சியடைந்து காணப்பட்ட சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வருமானம் ஆகஸ்டில் அதிகரிப்பை காண்பித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் மாதாந்த வருகை 30 வீத அதிகரிப்பை காண்பித்த போதிலும் அந்நிய செலாவணி வருமானம் ஒரு வீத அதிகரிப்பையே காண்பித்துள்ளது.
ஜூலை மாதத்தில் அந்நிய செலாவணி வருமானம்3 சதவீதம் குறைந்து 318.5 மில்லியன் அமெரிக்கடொலர்களாக இருந்தது இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 328.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் 8.2 சதவீதம் குறைந்து ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 258.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது
செப்டம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30.1 சதவீதம் அதிகரித்து 158971 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன
செப்டம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களுக்கான வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 5.3சதவீதம் அதிகரித்து 2.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.