இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிக கட்டணங்களை வசூலித்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுற்றுலா காவல்துறை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பொலிஸ் பிரிவில் செய்யப்பட்ட இரண்டு புகார்கள் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேக நபர்கள் பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் என இரண்டு பெண் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நிலையான கட்டணத்தை விட மிக அதிகமான தொகையைக் கோரி பெற்றதாகக் கூறப்படுகிறது
சுற்றுலா வழிகாட்டிகள் போர்வையில் கங்காராமய மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பின் பல இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று பின்னர் ஓட்டுநர்கள் முறையே ரூ.10000 மற்றும் ரூ.30இ000 வசூலித்ததாக போலீசார் தெரிவித்தனர்
