யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பிற்கான சிறப்பு மையம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், செயற்கை முறை கருக்கட்டல் (IVF) சேவைகள் 2026.06.19 அன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல், சத்திரசிகிச்சை மற்றும் சமூக, குடும்ப மருத்துவத் துறைகளின் நிபுணத்துவத்துடன் முன்னெடுக்கப்படுவதுடன், கனடா யாழ்ப்பாண மருத்துவப் பீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கம் (JMFOA) மனித வள ஆதரவை வழங்கியுள்ளது.
இச்சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியினர் கீழ்க்காணும் விசேட கிளினிக்குகளில் ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
1. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பெண்கள் சுகநல நிலையம்
ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 1.00 மணி
தொடர்புக்கு: 021-221 4218,
074 280 1496
2. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் கருவளச் சிகிச்சைப் பிரிவு
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
தொடர்புக்கு: 074 280 1496
மேலதிக தகவல்களுக்கு மேற்கண்ட தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்
