சிகரம் கல்வி தொழில் விசா சேவை யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் ஆரம்பமானது

5 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி, தொழில், விசா சேவை அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனத்தின் செயற்பாடுகள், யாழ் நகர மத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், முன்னாள் நெல்லியடி மகாவித்தியாலய அதிபர் கலாநிதி சேதுராஜா, யாழ் பல்கலைக்கழக சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன் உள்ளிட்ட, யாழ் வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் உள்ளிட்ட பல கல்வி மற்றும் தொழிற்றுறைசார் முன்னணி பிரமுகர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு, சிகரம் நிறுவுநர் கோ.றுஷாங்கன் தலைமையில் நடைபெற்றது
.
சிகரம் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த கல்வி – தொழில் வழிகாட்டி சேவையின் விரிவாக்கமாக,
தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் எப்போதுமே சிரமங்களை எதிர்கொள்ளும் க.பொ.த. உயர்தர கலைத்துறை கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு, தொழில் உத்தரவாதமான முறையில் கலைத்துறை வகுப்புகளை நடாத்தும் College of Arts என்கின்ற கலைத்துறை கல்லூரியின் செயற்பாடுகள் இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்,
ஏலவே பல வருடங்களாக சிகரம் நிறுவனம் நடாத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்-யுவதியருக்கு உள்நாட்டு – வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கிய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கைநெறியின் 13வது அணி,
புதிதாக ஆரம்பிக்கவுள்ள ஊடகம் – ஒளிப்படக்கலை – சினிமா இணைந்த கூட்டுக் கற்கைநெறி,
உயர்கல்வியைத் தொடரவும், தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் இளையோருக்கு பெரும் சவாலாக இருந்துவரும் ஆங்கிலமொழித் தொடர்பாடலை இலகுவாக்கும் புதிய அணுகுமுறையிலான ஆங்கிலக் கற்கைநெறி,
வெளிநாட்டுக் கல்வியில் ஆர்வம் கொண்டோருக்கு அவுஸ்ரேலியாவின் உயர்தர பல்கலைக்கழகமான Curtin University க்கான வடக்கு மாகாண முடவர் சேவை,
என்பனவும் இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
யாழ் நகரின் மத்தியில், பேரூந்து நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள, அமைதியான, விஸ்தீரணமான நிலப்பரப்பு, கட்டட வசதிகள் கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவு வளாகத்தில் சிகரம் நிறுவனத்தின் அனைத்துச் சேவைகளையும்,
இனிவரும் காலங்களில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் – யுவதியர் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்